விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகருக்கு இன்று பிறந்த நாள்..வாழ்த்து சொன்னாரா விஜய்?
சென்னை : நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் இன்று 73 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.
Recommended Video
நடிகர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர், பாடகி, எழுத்தாளர் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மைக் கொண்டவர். ஒளி இசைக் குழுவில் பாடகியாக இருந்த ஷோபா.
இருமலர்கள் எனும் திரைப்படத்தில் மகாராஜா ஒரு மகாராணி என்ற பாடலை பாடினார். பின்னர் படங்களில் பாடுவதில் பட்டமும் பெற்றார்.

ஷோபா சந்திரசேகர்
தனது கணவர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய பெரும்பான்மையான திரைப்படங்களில் இவர் பின்னணிப் பாடகராக பணிபுரிந்துள்ளார். விஜய் நடித்த சுறா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள நான் நடந்தால் அதிரடி பாடலை நவீன் மற்றும் ஜனனியுடன் இணைந்து பாடியுள்ளார். தனது கணவர் எஸ்.ஏ.சந்திரசேகரால் திரைப்படமாக எடுக்கப்பட்ட பல கதைகளை அவர் எழுதியுள்ளார் .

மகனுடன் சேர்ந்து பாடி உள்ளார்
அதுமட்டும் இல்லாமல் விஜய் நடித்த விஷ்ணு திரைப்படத்தில் "தொட்டேபெட்டா ரோடு மேல முட்ட பரோட்டா என்ற பாடலையும், ஒன்ஸ்மோர் படத்தில் வந்த ஊர்மிளா..ஊர்மிளா என்ற பாடலையும் தனது மகன் விஜய்யுடன் சேர்ந்து பாடியுள்ளார். இந்த இரண்டு பாடல்களும் மிகவும் ஹிட்டான பாடலாகும்.

மனக்கசப்பு
ஆரம்பத்தில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கி படங்களில் நடித்து உச்ச நடிகர் என பெயர் எடுத்த நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய விஜய் தந்தை நடவடிக்கைகளை எடுத்தார். இது விஜய்க்கு பிடிக்கவில்லை. நடிகர் விஜய் தன்னுடைய தந்தையுடன் மனக்கசப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் கலந்து கொள்ளவில்லை
இன்று வரை விஜய் தனது அப்பாவுடன் பேசுவதில்லை என சொல்லப்படுகிறது. தனது தாயுடன் மட்டுமே பேசுவதாகவும் தெரிகிறது. அண்மையில் எஸ் ஏ சந்திரசேகர் 81 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் போது அந்த கொண்டாட்டத்தில் விஜய் கலந்து கொள்ளவில்லை. எஸ்ஏசி வெளியிட்ட புகைப்படங்களில் ஷோபா மட்டுமே எஸ்ஏசிக்கு கேக் ஊட்டி இருந்தார். இது சமூகவலைதளங்களில் விவாத பொருளானது.

விஜய் வாழ்த்து சொன்னாரா?
இந்நிலையில், விஜய் தாயார் தனது 73வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அம்மாவுக்கு நடிகர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து சொன்னாரா என ரசிகர்கள் இணையத்தில் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











