Don't Miss!
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- News
இந்தியா தனது பிரச்சினைகளை தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது! நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை
- Automobiles
இன்றைய 2023ஆம் காலக்கட்டத்தில் இந்த அம்சங்கள் இன்றி கார் வாங்குவதே வேஸ்ட்! உங்க கார்களில் என்னென்ன மிஸ் ஆகுது?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Finance
பட்ஜெட்டுக்கு முன்பு தங்கம் விலை சரிவு.. தொடர்ந்து குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
- Travel
இனி திருப்பதி தரிசனம், ரூம் புக்கிங் செய்வது ஈசி – TTD யின் புதிய மொபைல் செயலி!
- Sports
3வது டி20 போட்டியிலும் இப்படியா? அகமதாபாத் பிட்ச்-ல் உள்ள சஸ்பன்ஸ்.. என்ன செய்யப்போகிறார் பாண்ட்யா??
வெறித்தனத்தில் விஜய் ரசிகர்கள்.. வெளியான 20 நிமிடங்களில் லட்சம் லைக்ஸ்களை பெற்ற வாரிசு பர்ஸ்ட் லுக்!
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது உருவாகி வருகிறது தளபதி 66.
Recommended Video
இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத்தில் நடைபெற்று தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதற்கென சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு சூட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்தி படத்தை கெடுத்த ஆர்ஜே பாலாஜி.. தியேட்டர் காத்து வாங்குது.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்!

நடிகர் விஜய்
நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டு சூட்டிங் நடைபெற்றது. தொடர்ந்து ஐதராபாத்தில் இரண்டாவது கட்ட சூட்டிங் நடைபெற்றது. அதில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நட்சத்திர பட்டாளம்
தொடர்ந்து படத்தில் பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டு, அதற்கான போஸ்டர்களும் வெளியாகின. தொடர்ந்த இந்த அப்டேட்கள் விஜய் ரசிகர்கள் குஷியாக்கின. இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்தது.

வம்சி படிப்பள்ளி இயக்கம்
இந்தப் படத்தை தமிழில் தோழா படத்தை கொடுத்த வம்சி படிப்பள்ளி இயக்கி வருகிறார். தோழா படம் அழகான ஒரு உறவை வெளிப்படுத்திய படம். இந்தப் படம் சிறப்பான காட்சி அமைப்புகள், திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்த நிலையில், அதைப்போன்ற குடும்ப சென்டிமெண்ட், ஆக்ஷன், காமெடியுடன் தளபதி 66 படமும் உருவாகி வருவதாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ முன்னதாக தெரிவித்திருந்தார்.

குடும்ப சென்டிமெண்ட் கதை
பீஸ்ட் போன்ற ஒரு படத்தில் நடித்துவிட்டு குடும்ப சென்டிமெண்ட்டில் விஜய்யை லேசான மற்றும் அழகான கதையில் பார்ப்பதற்கு அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். இந்தப் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாத நிலையில் நாளைய தினம் விஜய்யின் பிறந்தநாளையொட்டி இன்றைய தினம் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு டைட்டில்
படத்தின் டைட்டில் வாரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக கோட் சூட், டிரிம் செய்த தாடி என சிறப்பாக காணப்படுகிறார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.

20 நிமிடங்களில் லட்சம் லைக்ஸ்
டைட்டில் வெளியான 20 நிமிடங்களிலேயே இந்த போஸ்ட்ரை ட்ரெண்டிங்கில் வைத்து ஒரு லட்சம் லைக்ஸ்களை அளித்துள்ளனர். முன்னதாக இந்த போஸ்டரை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த லைக்ஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்த அதிகரித்து வருகிறது.

என்ன மாதிரியான படம்?
சமீப காலங்களில் பல சமூக பிரச்சினைகளை மையமாக வைத்து நடிகர் விஜய் தனது படக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்தப் படங்கள் மாஸாக அமைந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய்யிடம் இருந்து ஒரு படம் அமையவுள்ளது அவரது ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.