பீஸ்ட் படத்தோட அடுத்த கலக்கலுக்கு தயாரா... குடியரசு தினம் வரைக்கும் காத்திருங்க
சென்னை : தளபதி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் விஜய்.
விஜய்யின் நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் படம் தற்போது உருவாகி வருகிறது.
Recommended Video
படம் ஏப்ரல் மாதத்தில் கோடை கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படம்
நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், வரும் ஏப்ரல் மாதத்தில் கோடை கொண்டாட்டமாக படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளை முடித்த விஜய்
விஜய் மற்றும் பூஜா ஹெக்டே லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தன்னுடைய சூட்டிங் மற்றும் டப்பிங் பணிகளை விஜய் மற்றும் பூஜா ஹெக்டே முடித்துக் கொடுத்துள்ளனர்.

அப்டேட்களுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு தொடர்ந்து அப்டேட்களை அளித்து வருகிறது. கடந்த புத்தாண்டையொட்டியும் போஸ்டர் வெளியிடப்பட்டது.

ராணுவ அதிகாரியாக விஜய்?
படத்தில் ராணுவ அதிகாரியாக விஜய் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி, ஜார்ஜியா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் சூட்டிங் நடத்தப்பட்டது. இந்நிலையில் வரும் குடியரசு தினத்தில் விஜய் ராணுவ உடையில் இருக்கும்படியான போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிறப்பான மாஸ்டர் படம்
விஜய்யின் கடந்த படமான மாஸ்டர் 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி அதிகமான வசூலை பெற்றுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படமும் அவ்வாறே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் நெல்சனின் முந்தைய படமான டாக்டர் சிறப்பான வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

காமெடி கலாட்டா
இதையடுத்து அவரது பீஸ்ட் படத்திற்கும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ஏற்கனவே நகைச்சுவையில் பின்னி பெடலெடுப்பவர் விஜய். அவருடன் நகைச்சுவையில் கவனம் செலுத்தும் இயக்குநர் இணைந்துள்ள நிலையில் படத்தில் காமெடி கலாட்டாக்கள் அதிகமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











