ஆஸ்கர் சிலைகளுக்கு மத்தியில் ஆளுயர விஜய் சிலை.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்.. ரசிகர்கள் குஷி!
சென்னை: கடும் விமர்சனத்துக்கு மத்தியிலும் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், தமிழ் நாட்டில் மட்டுமே 140 கோடிக்கும் அதிகமான வசூலை விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் ஆளுயர சிலை ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

200 கோடி கிளப்பில் பீஸ்ட்
ஏப்ரல் 13ம் தேதி ஸோலோவாக ரிலீஸ் ஆன விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு ஏப்ரல் 14ம் தேதி வெளியான கேஜிஎஃப் திரைப்படம் வசூல் ரீதியாக கடும் போட்டியை கொடுத்தது. RRR படத்தின் வசூலையே பல இடங்களில் பின்னுக்குத் தள்ளி கேஜிஎஃப் 2 படம் 6 நாட்களில் 600 கோடி வசூலை அள்ளி உள்ள நிலையில், 7 நாட்களில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 200 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விமர்சன ரீதியாக அடி
இந்த ஆண்டு கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா மற்றும் விஜய் உள்ளிட்டோரின் படங்கள் வெளியாகப் போகிறது. பெரும் வசூல் வேட்டை காத்திருக்கிறது என தியேட்டர் உரிமையாளர்கள் சந்தோஷத்தில் இருந்தாலும், வலிமை, எதற்கும் துணிந்தவன் மற்றும் பீஸ்ட் என மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக பெரிய அடியை வாங்கி உள்ளன.

தளபதி 66 காப்பாற்றும்
இந்த சிக்கலில் இருந்து நடிகர் விஜய்யை நிச்சயம் தளபதி 66 படம் காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் வம்சி இயக்கத்தில் வெளியான தோழா, மகரிஷி உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தளபதி 66 படம் தரமா இருக்கும் என விஜய் ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

விஜய் சிலை
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆஸ்கர் சிலைகளுக்கு மத்தியில் விஜய்யின் அழகான ஆளுயுர சிலை ஒன்று இருக்கும் புகைப்படம் டிரெண்டாகி வருகிறது. மேலும், இந்த சிலை ஊட்டியில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய்யை சுற்றி ஏகப்பட்ட நெகட்டிவிட்டிகள் பரவி வரும் நிலையில், செம பாசிட்டிவ் ஆன விஷயமாக இந்த சிலை பார்க்கப்படுகிறது.

கன்னியாகுமரியில் சிலை
ஏற்கனவே நடிகர் விஜய்க்கு கன்னியாகுமரியில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒரு ஆளுயுர சிலையை அந்த பகுதியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் வைத்திருந்தனர். இந்நிலையில், ஊட்டியில் தற்போது விஜய்யின் புதிய சிலை வைக்கப்பட்டு இருப்பது விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











