மாஸ்டர் பட விழாவில் அந்த அறிவிப்பும் வரபோகுதாம்.. பரபரக்கும் கோலிவுட்.. எதிர்பார்ப்பில் ரசிகாஸ்!
சென்னை: மாஸ்டர் பட விழாவில் விஜய் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
கைதி படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் ஷாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கவுரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

குட்டி ஸ்டோரி
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷுட்டிங் அண்மையில் நிறைவடைந்தது. நடிகர் விஜய்க்கு விஜய் சேதுபதி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போட்டோக்கள் வெளியாகி வைரலானது. இதேபோல் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் கடந்த மாதம் வெளியானது. லெட் மி சிங் எ குட்டி ஸ்டோரி என தொடங்கும் இப்பாடல் பெரும் ஹிட்டானது.

வாத்தி கம்மிங்
இதனை நடிகர் விஜய் தனது சொந்த குரலில் பாடியிருந்தார். இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கில் ட்ராக் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாத்தி கம்மிங் என தொடங்கும் இப்பாடல் இன்று மாலை ரிலீஸாகிறது. இதனை இப்போதே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அடுத்தப்படம் அறிவிப்பு
இந்நிலையில் வரும் 15 ஆம் தேதி மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இந்த விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர்கள் பெயர்
ஏற்கனவே விஜயின் 65வது படத்தை இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி உள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால் பின்னர் அவர் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் இயக்குநர் மகிழ் திருமேனி, இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் இயக்குநர் முருகதாஸ் ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டு வருகின்றன. அவர்களில் இயக்குநர் முருகதாஸுக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

கோலிவுட் பரபரப்பு
விஜயின் அடுத்தப்படம் குறித்த தகவல் ரகசியமாக உள்ள நிலையில் மாஸ்டர் பட விழாவில் அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்களும் விஜயின் அடுத்தப் பட அறிவிப்பு குறித்து அறிய பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











