நைட் பார்ட்டியில் நடிகர் விஜய்.. யாரோடன்னு பாருங்க.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: நடிகர் விஜய் நைட் பார்ட்டியில் பங்கேற்ற போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தமிழ் பேசும் ரசிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி பேசும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.

விஜய்யின் ரசிகர்கள் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூறி வருகின்றனர். நடிகர் விஜய் தற்போது தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்க்கு ஜோடி

விஜய்க்கு ஜோடி

நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

பாடல் காட்சிகள்

பாடல் காட்சிகள்

இப்படத்தின் முதல் ஷெட்யூல் அண்மையில் ஜார்ஜியாவில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பாடல் காட்சிகளை சென்னையில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது.

படப்பிடிப்பில் தாமதம்

படப்பிடிப்பில் தாமதம்

ஆனால் படத்தின் ஹீரோயின்களில் ஒருவரான பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பேசு பொருளான விஜய்

பேசு பொருளான விஜய்

ஜார்ஜியாவில் இருந்து திரும்பிய கையோடு நடிகர் விஜய், மறைந்த நடிகர் விவேக்கின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். இதனால் சமூக வலைதளங்களில் பேசு பொருளானார் நடிகர் விஜய்.

பார்ட்டியில் விஜய்

பார்ட்டியில் விஜய்

இந்நிலையில் நடிகர் விஜய்யின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் விஜய் நைட் பார்ட்டியில் பங்கேற்றுள்ளார். அந்த போட்டோவில் நடிகர்கள் மோகன் லால் மற்றும் மகத்துடன் உள்ளார் நடிகர் விஜய்.

தெறிக்கவிடும் போட்டோ

தெறிக்கவிடும் போட்டோ

இவர்கள் மூன்று பேரும் இணைந்து ஜில்லா படத்தில் நடித்திருந்தனர். அப்போது இந்த போட்டோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த போட்டோ தற்போது இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

More from Filmibeat

Read more about: vijay night party விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X