என்னை தாலாட்ட வருவாளோ...தனியார் டிவி சேனலில் பாடிய விஜய்.. திடீரென வைரலாகும் வீடியோ!
Recommended Video
சென்னை: நடிகர் விஜய் தனியார் டிவி சேனலில் என்னை தாலாட்ட வருவாளோ பாடலை பாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
விஜயின் நடிப்பில் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான படம் காதலுக்கு மரியாதை. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்திருப்பார்.
அவர் மட்டுமின்றி மணிவண்ணன், சிவகுமார், ஸ்ரீவித்யா, ராதாரவி, தலைவாசல் விஜய், காக்கா ராதாகிருஷ்ணன், சார்லி, என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்திருப்பார்கள்.

பாடல்கள்
இந்தப்படம் ரிலீஸான நாளில் பெரும் வெற்றி பெற்றது. பல தியேட்டர்களில் 100 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்தது. படத்தில் இடம் பெற்ற 8 பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.

ஹரிஹரன் பவதாரிணி
குறிப்பாக ஹரிஹரன் மற்றும் பவதாரிணி குரலில் ஒலித்திருக்கும் என்னை தாலாட்ட வருவாளோ என்ற பாடலை அப்போது முனுமுனுக்காத வாய்களே கிடையாது. இதேபோல் ஆனந்த குயிலின் பாட்டு, அய்யா வீடு திறந்துதான் கிடக்கு ஆகிய பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.
சொந்தக்குரலில்
இந்நிலையில் நடிகர் விஜய் தனியார் சேனல் ஒன்றில் விஜய் தனது சொந்தக்குரலில் பாடியிருக்கிறார். என்னை தாலாட்ட வருவாளோ என்ற பாடலை பாடியிருக்கிறார்.
விஜய் ரசிகர்கள்
அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications