வாவ்.. ஹீரோவாக அறிமுகமாகும் விஜய் மகன்.. அதுவும் இந்த இயக்குநர் கூடவா? சும்மா தெறிக்குதே!
சென்னை: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருகிறார் நடிகர் விஜய். கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது.
கனடாவில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்து வரும் ஜேசன் சஞ்சயை ஹீரோவாக ஆக்க ஏ.ஆர். முருகதாஸ் முயற்சி செய்து வருகிறாராம்.

துப்பாக்கி 2
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தன. இதில், மெகா பிளாக்பஸ்டர் படமாக மாறிய துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவார் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் வேறு ஒரு ஐடியா வைத்துள்ளார்.

ஓடவில்லை
சர்கார் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என விநியோகஸ்தர்கள் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால், தனது அடுத்த படத்தை வித்தியாசமாக இயக்க ஏ.ஆர். முருகதாஸ் முடிவெடுத்துள்ளார்.

விஜய் மகன்
புதுமுகத்தை வைத்து படம் இயக்கலாம் என யோசித்துள்ள ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தலாம் என்ற ஐடியாவில் இருக்கிறாராம். இதுகுறித்து, நடிகர் விஜய்யிடமும் முருகதாஸ் பேசியுள்ளாராம். விரைவில் இந்த கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் என்ன சொன்னார்
மாஸ்டர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நடிகர் விஜய், தனது மகனை தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தலாம் என்ற முருகதாஸின் ஐடியாவை கேட்டுவிட்டு, இதுகுறித்து, தன்னிடம் பேச வேண்டாம், நேரடியாக மகனிடமே பேசுங்க, சினிமாவில் நடிக்க வருவதும் வராததும் அவருடைய இஷ்டம் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே
விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் "நான் அடிச்சா தாங்க மாட்டேன்" பாடலுக்கு, அப்பா விஜய்யுடன் இணைந்து ஜேசன் சஞ்சய் ஆடியிருப்பார். கனடாவில் சினிமா குறித்த படிப்பை படித்து வரும் ஜேசன் சஞ்சய், சமீபத்தில் இயக்கிய குறும்படங்களும், தளபதி ரசிகர்களால், வரவேற்பை பெற்றது.

விக்ரமை தொடர்ந்து
ஆதித்ய வர்மா படத்தின் மூலமாக நடிகர் விக்ரமின் துருவ் விக்ரம், தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். தற்போது, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயும் ஹீரோவாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் பலம், சஞ்சய்க்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications











