விஜய் மகன் சஞ்சயின் குறும்படம்.. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.. டைட்டிலும் வெளியீடு!

சென்னை : நடிகர் விஜய் சிறப்பான பல படங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த நடிகராக தன்னை கோலிவுட்டில் நிலைநிறுத்தியுள்ளார்.

விஜய் -சங்கீதா தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், மகன் சஞ்சய் நடிப்பில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சஞ்சய், இயக்கத்தில் அதிக ஆர்வத்துடன் காணப்படுகிறார். அவர் தற்போது குறும்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் அடுத்தடுத்த சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பீஸ்ட், வாரிசு படங்களை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தில் இணைந்த விஜய் -லோகேஷ் கூட்டணி தற்போது லியோ படத்தில் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மாஸ்டர் படத்தில் வித்தியாசமான விஜய்யை காட்சிப்படுத்திய லோகேஷ், இந்தப் படத்தில் விஜய்யை தன்னுடைய 100 சதவிகித படத்தில் நடிக்க வைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

 லியோ படம்

லியோ படம்

கடந்த மாதத்தின் முதல் நாளிலிருந்தே லியோ படத்தின் அப்டேட்கள் வெளியான நிலையில் தொடர்ந்து 50 நாட்கள் சூட்டிங்கையும் முடித்துக் கொண்டு படக்குழு தற்போது சென்னை திரும்பியுள்ளது. இதையடுத்து சென்னையில் வரும் ஏப்ரல் 4ம் தேதி அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளது. இதற்கான பணிகளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீர் சூட்டிங்கை சரியான திட்டமிடலுடன் நடத்தி முடித்துள்ள லோகேஷ், சென்னை சூட்டிங்கையும் சிறப்பாக திட்டமிட்டு ஏப்ரல் மாதத்திலேயே நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் மகன் சஞ்சய்

விஜய்யின் மகன் சஞ்சய்

நடிகர் விஜய்க்கு சங்கீதா என்பவருடன் திருமணம் நடந்து மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா உள்ளனர். மகன் சஞ்சய் விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய நிலையில், மகள் திவ்யா தெறி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய் சிறப்பான நடிகராக அனைவரையும் கவர்ந்துவரும் நிலையில், அவரது மகன் சஞ்சயும் நடிகராக அறிமுகமாக வேண்டும் என்பதே விஜய் ரசிகர்களின் ஆசையாக உள்ளது.

இயக்கத்தில் ஆர்வம் செலுத்தும் சஞ்சய்

இயக்கத்தில் ஆர்வம் செலுத்தும் சஞ்சய்

ஆனால் சஞ்சய் இயக்கத்தில் அதிகமான ஆர்வத்தை காட்டி வருகிறார். இயக்கம் தொடர்பான படிப்பையும் இவர் அமெரிக்காவில் படித்து முடித்துள்ளார். தன்னுடைய மகனுக்கு நடிப்பில் ஆவம் இல்லை என்றும் இயக்கத்தில்தான் அதிகமான ஆர்வத்தை அவர் காட்டி வருவதாகவும் விஜய்யே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சஞ்சய் குறும்படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதன் படப்பிடிப்பு காட்சிகள் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

சஞ்சய் இயக்கும் குறும்படம்

சஞ்சய் இயக்கும் குறும்படம்

இந்நிலையில் தற்போது சஞ்சயின் குறும்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அவர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்திற்கு புல் தி ட்ரிகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தின் கதையையும் அவரே எழுதியுள்ளார். இந்த குறும்படத்திற்கு எடிட்டிங்கையும் சஞ்சயே செய்துள்ளார். படத்திற்கு சந்தோஷ் இசையமைத்துள்ள நிலையில், வித்தியாசமான வகையில் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. விரைவில் இந்த குறும்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X