நடிகர் விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான்…:கார்த்திக் ராஜா!

Recommended Video

நடிகர் விஜயின் வெற்றி ரகசியத்தை சொல்கிறார் ஸ்ரீ ரெட்டி- வீடியோ

சென்னை: நடிகர் விஜய் வெற்றியின் ரகசியம் என்ன என்று கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார்.

சமீப காலங்களில் நடிகர் விஜய்யின் படம் அவ்வளவு எளிதாக ரிலீஸ் ஆகிவிடுவது இல்லை. பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறது. ஆனாலும் அவற்றுக்கெல்லாம் அசராமல் எதிர்கொண்டு வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கிறார்.

Actor Vijays success secret revealed!

நடிகர் விஜய் எப்படிப்பட்டவர் என்பது குறித்து பலர் சொல்லியிருக்கிறார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் மிக அமைதியாக இருப்பார். நடன இயக்குனர் சொல்லும் மூவ்மென்ட்டுகளை கவனித்துக்கொண்டே இருப்பார். டேக் போகலாமா என்றவுடன் அச்சு பிசகாமல் அப்படியே ஆடுவார் அந்த அளவுக்கு திறமைசாலி என்றெல்லாம் நாம் கேள்விபட்டிருக்கிறோம்.

இப்போது இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, தளபதி விஜய் குறித்த ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். ஒருமுறை இளையராஜாவுக்கு கீபோர்டு வாசித்துக் கொண்டிருந்தபோது விஜய் அருகில் இருந்தாராம். அப்போது ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி மனதில் ஆழமாக சிந்தித்துக் கொண்டே இருந்தாராம்.

இதை கவனித்த கார்த்திக்ராஜா, நாம் எதை செய்கிறோமோ அதைப்பற்றி மிக ஆழமாக சிந்திப்பது அதில் மேன்மையடையச் செய்யும். விஜய் ஒரு விஷயத்தில் கவனமாக ஆழ்ந்து சிந்திப்பதைக் கண்டு வியந்து போனேன். அதுதான் அவரை வெற்றிபெற வைக்கிறது. வெற்றிபெற்றாலும் அதை பெரிதாகக் கொண்டாடாமல் அவர் நிதானமாக இருப்பதற்கு அதுவே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

"வெற்றிக்குப் பின்னாடி ஒரு ஆணோ அல்லது பெண்ணோ இருப்பாங்க என்றெல்லாம் சொல்லி கேள்விபட்டிருக்கேன். ஆனால் என் வெற்றிக்கு பின்னால் நிறைய அவமானங்களே இருந்தன. அதையெல்லாம் நினைத்து கவலைப்பட்டிருந்தால் இன்று என்னால் ஜெயித்திருக்கமுடியாது" என்று விஜய் ஒரு மேடையில் சொன்னார்.

இது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் எல்லோருமே எடுத்துக்கொள்ளக்கூடிய வெற்றியின் தாரக மந்திரம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X