தலைவா 9ம் ஆண்டு கொண்டாட்டம்.. ரசிகர்களை கவர்ந்த மேக்கிங் வீடியோ!

சென்னை : நடிகர் விஜய் அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Recommended Video

தலைவா 9ம் ஆண்டு கொண்டாட்டம்.. ரசிகர்களை கவர்ந்த மேக்கிங் வீடியோ!

விஜய் ரசிகர்கள் எப்போதுமே அவருக்கு ஆதரவாகவே பல விஷயங்களில் செயல்பட்டு வருகின்றனர்.

தற்போது தலைவா படத்தின் 9ம் ஆண்டு கொண்டாட்டத்தை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் இவரது பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் வசூலை குவிக்க தவறவில்லை. அந்த வகையில் இந்தப் படம் விஜய்க்கு வெற்றிப் படமாகவே அமைந்தது. அவரும் குழுவினருடன் இணைந்து வெற்றிக் கொண்டாட்டத்தை மேற்கொண்டார்.

வாரிசு படத்தில் விஜய்

வாரிசு படத்தில் விஜய்

இதனிடையே பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே தனது 66வது படமான வாரிசு படத்தின் சூட்டிங்கில் விஜய் இணைந்தார். பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது.

தளபதி 67 படம்

தளபதி 67 படம்

இந்நிலையில் அடுத்ததாக தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ளார் விஜய். இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் அதிரி புதிரி சக்சஸ் காரணமாக மற்ற படங்களை காட்டிலும் தளபதி 67 படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ட்ரெண்டிங்கில் தலைவா படம்

ட்ரெண்டிங்கில் தலைவா படம்

வாரிசு, தளபதி 67 என அடுத்தடுத்த படங்களை ரசிகர்கள் தொடர்ந்து ட்ரெண்ட் செய்த நிலையில், இன்றைய தினம் காலையிலிருந்தே புதிதாக தலைவா படம் ட்ரெண்டிங்கில் உட்கார்ந்துக் கொண்டது. என்னடா இது என்று அனைவரும் பார்த்த நிலையில், இன்றைய தினம் தலைவா படம் தனது 9 ஆண்டு நிறைவை கொண்டாடி வருவது தெரியவந்துள்ளது.

 பிரச்சினைகளை சந்தித்த தலைவா படம்

பிரச்சினைகளை சந்தித்த தலைவா படம்

கடந்த 2013 ஆகஸ்ட் 9ம் தேதி மிகுந்த பிரச்சினைகளுக்கு இடையில் வெளியானது தலைவா. இந்தப் படத்தை ஏஎல் விஜய் இயக்கியிருந்த நிலையில், படத்தின் தலைப்பு மிகுந்த எதிர்ப்பை சந்தித்தது. தொடர்ந்து ரிலீசுக்கு முந்தைய நாள் முழு படமும் இணையதளத்தில் வெளியானது. இந்த காரணங்கள் படத்தின் வெற்றியை தடுக்கும் என்று பலரும் நினைத்தனர்.

சூப்பர் வெற்றி

சூப்பர் வெற்றி

ஆனால் நினைத்ததற்கு மாறாக இந்தப் படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. ரசிகர்கள் இந்தப் படத்திற்கு அதிகமான ஆதரவை கொடுத்தனர். இந்தப் படம் ரிலீசாக தாமதமான நிலையில், ஒரு மாநிலத்தில் இருந்து பக்கத்தில் மாநிலங்களுக்கு சென்று ரசிகர்கள் படம் பார்த்த சம்பவங்களும் நடந்தன. ஆனால் நினைத்ததற்கு மாறாக இந்தப் படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. ரசிகர்கள் இந்தப் படத்திற்கு அதிகமான ஆதரவை கொடுத்தனர். இந்தப் படம் ரிலீசாக தாமதமான நிலையில், ஒரு மாநிலத்தில் இருந்து பக்கத்தில் மாநிலங்களுக்கு சென்று ரசிகர்கள் படம் பார்த்த சம்பவங்களும் நடந்தன.

9வது ஆண்டு நிறைவு

9வது ஆண்டு நிறைவு

இந்நிலையில் இன்றைய தினம் தனது 9வது ஆண்டு நிறைவை படம் கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்கள் ஏராளமான போஸ்டர்களை வெளியிட்டு ரணகளப்படுத்தி வருகின்றனர். இதனிடையே தலைவா படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வீடியோ மிகவும் சிறப்பாக காணப்படுகிறது.

ஆல் டைம் பேவரிட் படம்

ஆல் டைம் பேவரிட் படம்

விஜய் எப்போதுமே மாஸ் ஹீரோ தான் என்பதை அவர் நினைக்கிறாரோ இல்லையோ அவரது ரசிகர்கள் அதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். அவர்களின் ஆல் டைம் பேவரிட் லிஸ்ட்டில் தலைவா படத்திற்கு எப்போதுமே ஒரு இடம் உண்டு. அதை இன்றைய தினம் மீண்டும் ரசிகர்கள் நிரூபித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X