Don't Miss!
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
லீக்கானதா தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக்? திடீரென டிரெண்டான #Thalapathy65.. புத்தாண்டு பரிசு ரெடியா?
சென்னை: தளபதி விஜய்யின் 65வது படத்தின் டைட்டில் போஸ்டர் லீக்கானதாக ஒரு போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி 65 படத்தை இயக்கப் போறது யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் நீக்கப்பட்ட நிலையில், இயக்குநர் நெல்சன் படத்தை இயக்குவார் என்கிற தகவல் பரவி வருகிறது.
பொங்கலுக்கு வருமா?
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் வரும் பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பொங்கலுக்கு மாஸ்டர் ரிலீஸ் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டுக்கு டிரைலர்
மாஸ்டர் படத்தின் டிரைலரை புத்தாண்டுக்கு வெளியிட்டு, அதனுடன் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் அறிவிப்பையும் சேவியர் பிரிட்டோ தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தியேட்டர் இருக்கைகள் 100 சதவீதம் அனுமதிக்கப்படும் வரை படத்தை வெயிட் பண்ணி ரிலீஸ் செய்யலாமா என்று விஜய் தரப்பு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
ஏ.ஆர். முருகதாஸ் இல்லை
மாஸ்டர் படம் ரெடியாகி விட்ட நிலையில், தளபதி விஜய் அடுத்ததாக என்ன படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற ஆர்வம் தான் ரசிகர்களுக்கு தற்போது அதிகரித்துள்ளது. முன்னதாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் கடைசியாக முருகதாஸ் அந்த புராஜெக்டில் இருந்து வெளியேறினார்.
யார் இயக்குநர்
கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படங்களை இயக்கியுள்ள நெல்சன் தான் தளபதி 65 படத்தை இயக்கவுள்ளார் என்கிற மாஸ் அப்டேட் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. தளபதி விஜய்யை சந்தித்து நெல்சன் கதை சொல்லி ஓகே பண்ணி விட்டார் என்றும் தகவல்கள் கசிந்தன.
லீக்கான போஸ்டர்
இந்நிலையில், தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கசிந்துள்ளது என சமூக வலைதளங்களில் #Thalapathy65 என்ற ஹாஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். வரும் புத்தாண்டுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக வெளியாக இருந்த நிலையில், தற்போது கசிந்துள்ளதாம்.
டார்கெட் ராஜா
தளபதி விஜய்யின் 65வது படத்திற்கு டார்கெட் ராஜா என வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், தளபதி விஜய் வேற லெவல் மெர்சல் லுக்கில் செம ஸ்டைலாக இருக்கிறார். இப்படி ஒரு ஃபேன் மேட் அல்லது ஃபேக் போஸ்டர் உருவாக்கப்படுமா? இது ரியலா? ஃபேக்கா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
அனிருத் இசை
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கவுள்ள 65வது படத்திற்கு தமன் இசையமைப்பார் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. இயக்குநர் நெல்சன் 'டார்கெட் ராஜா' டைட்டிலில் தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கினால், அனிருத் தான் இசையமைப்பார் என்றும் தற்போது லீக்காகி உள்ள அந்த போஸ்டரிலும் அனிருத் பெயர் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு பரிசு
தளபதி ரசிகர்களுக்கு ஸ்பெஷலான புத்தாண்டு பரிசாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சன் பிக்சர்ஸ் முடிவு செய்து வைத்திருந்த நிலையில், கசிந்து விட்டதா? என்றும் நிச்சயம் தளபதி ரசிகர்களுக்கு மாஸ்டர் டிரைலர் மற்றும் தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் என டபுள் புத்தாண்டு பரிசு இருக்கும் என்றும் தளபதி ரசிகர்கள் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.