கொடைக்கானலில் துவங்கிய தளபதி 67 சூட்டிங்.. விஜய் கலந்துக்கிட்டாரா?
சென்னை : நடிகர் விஜய் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வாரிசு படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்தின் சூட்டிங் துவங்கி நடைபெற்று வருகிறது.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.
தளபதி 67 படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடித்து வருவதாகவும் அவருக்கு மிஷ்கின் உள்ளிட்டவர்கள் வில்லனாக களமிறங்கியுள்ளதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் வாரிசு படம்
விஜய்யின் வாரிசு படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வாரிசு படம் வசூலில் மிரட்டி வருகிறது. படம் வெளியான ஒரே வாரத்தில் 210 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் ஈட்டியுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த வாரிசு படம்
குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு வாரிசு படம் வெளியான நிலையில், விஜய்யின் படங்களுக்கேயுரிய காமெடி, ஆக்ஷன் என படம் களைகட்டியது. படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம், ஜெயசுதா உள்ளிட்டவர்கள் விஜய்யுடன் நடித்த நிலையில், படம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தளபதி 67 படத்தில் விஜய்
இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே தளபதி 67 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் விஜய். மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தப்படத்தின் மூலம் விஜய் இணைந்துள்ளார். படத்தில் விஜய் 50 வயது கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் அடுத்த அப்டேட்
படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஜோடியாகவுள்ளதாக, படத்தில் மிஷ்கின் உள்ளிட்ட 6 பேர் விஜய்யுடன் வில்லனாக மோதவுள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், இன்னும் சில தினங்களில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

கொடைக்கானலில் துவங்கிய சூட்டிங்
இந்நிலையில் படத்தின் சூட்டிங் தற்போது கொடைக்கானலில் துவங்கியுள்ளதாகவும் இந்த சூட்டிங்கில் மிஷ்கின் மற்றும் சாண்டி இடம் பெற்றுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த சூட்டிங்கில் விஜய் பங்கேற்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

விரைவில் டைட்டில் ப்ரமோ
தளபதி படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில், விரைவில் விக்ரம் படத்தை போலவே டைட்டில் பிரமோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் கலக்கல் பிரமோவை எதிர்பார்க்கலாம். படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்து வரும் தீபாவளியையொட்டி படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











