Don't Miss!
- News
சிலருக்கு என் "போட்டோ" மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Lifestyle
வாழைப்பூ கட்லெட்
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
என்னது மாஸ்டர் படத்தின் பூஜை போடப்பட்ட அதே நாள்ல தளபதி67 படத்தோட சூட்டிங் துவங்குதா?
சென்னை : நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது அவர் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தளபதி 68 டைரக்டர் இவரா...இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

தளபதி 66 படம்
நடிகர் விஜய் மாஸ்டர், பீஸ்ட் படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை வம்சி படிப்பள்ளி இயக்கி வருகிறார். கார்த்தி, நாகார்ஜூனா நடிப்பில் வெளியான தோழா வெற்றிப்படத்தை இவர் இயக்கியுள்ள நிலையில் தற்போது தளபதி படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வம்சி இயக்கம்
இந்தப் படத்தில் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து வம்சி இயக்கி வருவதாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ முன்னதாக பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் படத்தில் விஜய் படங்களுக்கே உரிய காமெடி, ஆக்ஷன் போன்றவையும் சிறப்பான வகையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஐதராபாத்தில் 2வது கட்ட சூட்டிங்
இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் சென்னையில் துவங்கி நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாவது கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்திற்கு சூட்டிங்கிற்கு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வைரலானது. ரசிகர்களும் அதிகமாக இந்த வீடியோவை பகிர்ந்தனர்.

தளபதி 67 இயக்குநர் லோகேஷ்?
இந்நிலையில் விஜய்யின் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் இப்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தளபதி 67 படத்தை அவரது மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் இது உறுதி செய்யப்பட்ட தகவல் என்றும் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 3ல் பூஜை?
மாஸ்டர் படத்தின் பூஜை போடப்பட்ட அக்டோபர் 3ம் தேதியே இந்தப் படத்தின் பூஜையும் இந்த ஆண்டில் போடப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மாஸ்டர் படம் 50 சதவிகிதம் மட்டுமே லோகேஷ் படமாக அமைந்தது. விஜய்க்காக கதையில் சில காம்ப்ரமைஸ்களை அவர் செய்திருந்தார். இந்நிலையில் இந்தப் படம் 100 சதவிகிதம் லோகேஷின் படமாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

கதையை தயார் செய்யும் லோகேஷ்
தற்போது கமல்ஹாசனின் விக்ரம் படத்தை முடித்துள்ள லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படத்திற்கான கதையை உருவாக்க துவங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
-
சோழ பட்டத்து இளவரசன் ஆதித்ய கரிகாலன்... பொன்னியின் செல்வனில் விக்ரமின் அசத்தல் போஸ்டர் வெளியீடு
-
கோலிவுட் முன்னணி நடிகையோட பேவரிட் ஹீரோவும் விஜய்தானாம்.. யார் அந்த நடிகைன்னு பார்க்கலாமா!
-
தளபதி 67 அறிவிப்புக்காகதான் வெயிட்டிங்.. வந்தா உடனே சொல்லிடுவேன்.. எதைப்பற்றி சொல்லியிருக்காரு லோகேஷ்!