LEO: தளபதி 67 டைட்டில் வெளியானது.. சாக்லேட் தடவிய கத்தியுடன் லியோ விஜய்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!

சென்னை: நடிகர் விஜய்யின் 67வது படத்திற்கு டைட்டில் லியோ (LEO) என வைத்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். டைட்டிலுடன் சேர்ந்து மிரட்டலான ப்ரோமோ வீடியோவும் வெளியாகி உள்ளது.

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவருக்குள் இருந்த சினிமா ஆர்வம் அவரை இயக்குநராக மாற்றியது.

மாநகரம் வெற்றிப் பெற்ற நிலையில், கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜை இந்தியாவே திரும்பிப் பார்த்தது. விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்த லோகேஷ் கனகராஜ் மீண்டும் அவருடன் இணைந்து தளபதி 67 படத்தை கொடுத்துள்ளார். தனது திரையுலக குருநாதரான கமல்ஹாசனுக்கு கடந்த ஆண்டு விக்ரம் எனும் மிகப்பெரிய சம்பவத்தை செய்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

சொதப்பிய விஜய் படங்கள்

சொதப்பிய விஜய் படங்கள்

மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் நடித்த பீஸ்ட் மற்றும் வாரிசு இரு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தாலும், விமர்சன ரீதியாக பெரியளவில் சொதப்பின. விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மாஸ்டரை விட ஒரு மாஸ்டர்பீஸாக விஜய் படம் வரவேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு அப்படி ஒரு படமாக தளபதி 67 அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு அதிகம்

எதிர்பார்ப்பு அதிகம்

விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்றதுமே வாரிசு படத்தை விட்டுட்டு விஜய் ரசிகர்கள் இந்த படத்தின் மீது தங்களின் ஃபோகஸை அப்படியே திருப்பினர். கடைசி நேரத்தில் தளபதி 67 பூஜை வாரிசு படத்துக்கு முன்னதாக நடந்த நிலையில், அதன் புகைப்படங்களை கூட வெளியிடாமல் வாரிசு படத்தை ஓட வைத்தனர்.

காஸ்ட்டிங்கே மிரட்டுது

காஸ்ட்டிங்கே மிரட்டுது

தளபதி 67 திரைப்படம் எல்சியூவாக இருக்குமா இல்லையா என்கிற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்து வந்த நிலையில் தளபதி 67 படத்தின் காஸ்டிங்கை பார்த்து செம குஷியாகி விட்டனர் ரசிகர்கள். விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் மற்றும் மேத்யூ தாமஸ் என இதுவரை வெளியாகி உள்ள லிஸ்ட்டே மிரட்டுது.

லியோ

லியோ

தளபதி 67 படத்துக்கு குருதி மற்றும் குருதிப்புனல் அல்லது ஈகிள், ராய்ஸ் என ஏகப்பட்ட கெஸ்ஸிங் இருந்த நிலையில், அதிரடியாக லோகேஷ் கனகராஜ் யாருமே கெஸ் பண்ணாத அளவுக்கு லியோ (LEO) என்கிற டைட்டிலை வைத்து விட்டார். பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த வில்லு படத்துக்கே சிங்கம் டைட்டில் வைக்கப்பட்ட நிலையில், சூர்யா படத்துக்கு அந்த டைட்டில் சென்றதால் சிங்கம் டைட்டில் மிஸ் ஆனது. இந்நிலையில், லியோவாக தளபதி 67 படத்தில் ராஜாங்கம் செய்ய வருகிறார் விஜய்.

பிளட் ஸ்வீட் ப்ரோமோ

பிளட் ஸ்வீட் ப்ரோமோ

ரத்தத்தால் விஜய் உருவம் இருந்ததாக கருதப்பட்ட நிலையில், இந்த ப்ரோமோ வீடியோவில் சாக்லேட் ஒரு பக்கம் செய்கிறார் விஜய், மறுபக்கம் கத்தி ஒன்றை உருவாக்குகிறார். கடைசியில் அந்த கூர்வாளை சாக்லேட்டில் நனைத்து அதை தொட்டு ருசித்துப் பார்த்து பிளட் ஸ்வீட் என வசனம் பேசி விட்டு காரில் வரும் எதிரிகளை பந்தாட எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

ரிலீஸ் தேதி

ரிலீஸ் தேதி

இந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியாகும் என்கிற அட்டகாசமான அறிவிப்புடன் ஆயுத பூஜையை கொண்டாட ஆயுதத்துடன் தளபதி விஜய் ரெடியாக நிற்பதாக அறிமுக ப்ரோமோவே வெறித்தனம் காட்டுகிறது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள மேக்கிங் வீடியோ மற்றும் விஜய்யின் லுக் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X