விஜய்யோட தெறி ஸ்டைல் ஜாக்கி சான், சௌந்தர்யாவிடமிருந்து காப்பி அடிக்கப்பட்டதா?.. ரசிகர்கள் விமர்சனம்
சென்னை: நடிகர் விஜய் தெறி படத்தில் பபுள் கம்மை வாயில் போடும் ஸ்டைலை ஜாக்கிசானும், சௌந்தர்யாவும் ஏற்கனவே செய்துவிட்டனர் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.
தந்தையின் துணையோடு சினிமாவுக்குள் நுழைந்தாலும் டனது திறமையால் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய். அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் நூறு கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகக்கூடியவை. இதனால் விஜய்யை நம்பி எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை கொட்டலாம் என்ற நிலையில் இருக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

மாஸ் ஹீரோவான விஜய்
நடிகர் விஜய்யை பொறுத்தவரை ஆரம்பத்தில் காதல் படங்களில் நடித்துவந்தாலும் ஒருகட்டத்துக்கு மேல் தனது ரூட்டை மாற்றினார். அப்படி அவர் நடித்த திருமலை படம் கமர்ஷியல் ஹிட்டிக்க தனது பாதை இனி கமர்ஷியல்தான் என்பதில் தெளிவாகி அதில் பயணித்துவருகிறார். அப்படி அவர் நடித்த படங்களில் தனக்கென தனி பாடி லாங்குவேஜையும், ஸ்டைலையும் உருவாக்கிக்கொண்டார். அவை ரசிகர்களிடையே வரவேற்பையும் பெற்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு விஜய்யின் ஸ்டைல் சிறுவர்களை கவர்ந்தது.

தெறியில் விஜய் ஸ்டைல்
படத்துக்கு படம் ஒரு ஸ்டைலை கொண்டிருந்த விஜய் தெறி படத்தில் வித்தியாசமான ஸ்டைலை செய்தார். அதாவது பபுள் கம்களை இரண்டு முறை அடுத்தடுத்து போடும் ஸ்டைல் விஜய்யின் அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போயிருக்கிறது. பிகில் உள்ளிட்ட படங்களிலும் அந்த ஸ்டைலை தொடர்ந்து செய்தார் நடிகர் விஜய். விஜய் இரண்டு முறை பபுள் கம்களை போடும் காட்சிகள் திரையரங்கில் வரும்போதெல்லாம் ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள்.

விஜய்யின் ஸ்டைல் காப்பி அடிக்கப்பட்டதா?
இந்நிலையில் நடிகர் விஜய்யின் இந்த ஸ்டைல் தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பபுள் கம்களை இரண்டு முறை வாயில் போடும் ஸ்டைலை மறைந்த நடிகை சௌந்தர்யா ஏற்கனவே தெலுங்கு படம் ஒன்றில் செய்துவிட்டார் என ரசிகர்கள் கூறி சௌந்தர்யா அவ்வாறு செய்யும் வீடியோவை பகிர்ந்துவருகின்றனர். அதேபோல் மற்றொரு தரப்பினர் இந்த ஸ்டைலை சௌந்தர்யாவுக்கு முன்னதாகவே 'ஆர்மர் ஆஃப் காட்' என்ற படத்தில் ஜாக்கி சான் செய்துவிட்டார் எனவும் கூறி அந்த வீடியோவையும் பகிர்ந்துவருகின்றனர். இதனால் விஜய்யின் இந்த ஸ்டைல் காப்பி அடிக்கப்பட்டதா என கேள்வி எழுந்துள்ளது.

விஜய் நடிக்கும் லியோ
முன்னதாக, விஜய் நடிப்பில் வாரிசு படம் சமீஅப்த்தில் வெளியானது. ஆனால் அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனையடுத்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்த மாஸ்டர் படம் மெகா ஹிட்டானதால் இந்தப் படமும் அதே பாணியில் ஹிட்டாகும் என்று ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். பட்த்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











