25வது நாள் கொண்டாட்டத்தில் வாரிசு படம்.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படம் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் கடந்த மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது.

பொங்கல் பண்டிகையையொட்டி வாரிசு படம் ரிலீசானது. அஜித்தின் துணிவு படத்துடன் இந்தப் படம் ஒரே நாளில் மோதியது.

இந்நிலையில் தற்போது வாரிசு படம் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

விஜய்யின் வாரிசு படம்

விஜய்யின் வாரிசு படம்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யின் வாரிசு படம் கடந்த மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. பொங்கல் பண்டிகையையொட்டி வாரிசு படம் வெளியான நிலையில், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

 குடும்ப சென்டிமெண்ட் படம்

குடும்ப சென்டிமெண்ட் படம்

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் ஷாம், பிரபு, சரத்குமார், ஜெயசுதா உள்ளிட்டவர்களும் படத்தில் இணைந்துள்ளனர். குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு வாரிசு படம் ரிலீசாகியுள்ள நிலையில், குடும்ப ஆடியன்சை இந்தப் படம் திரையரங்குகளுக்கு அதிகளவில் வரவழைத்துள்ளது.

வம்சி பைடிப்பள்ளி இயக்கம்

வம்சி பைடிப்பள்ளி இயக்கம்

படம் துவக்கத்தில் அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்றது. இந்த விமர்சனங்களுக்கு படத்தின் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி விளக்கங்களையும் கொடுத்தார். ஒரு படத்தை இயக்குவது ஜோக் அல்ல என்றும் அவர் தெரிவித்திருந்தார். விஜய் போன்ற மாஸ் ஹீரோவின் படத்தை ரசிகர்களுக்கு பிடித்தமானதாக கொடுப்பது எளிதானதல்ல என்றும் தன்னை நம்பி இந்தப் படத்தை கொடுத்த விஜய்க்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி

இந்நிலையில் இந்தப் படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிகரமான 25வது நாளை திரையரங்குகளில் எட்டியுள்ளது. விரைவில் ஓடிடியிலும் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படம் திரையரங்குகளில் மட்டுமே ஏறக்குறைய 300 கோடி ரூபாய் வசூலை எட்டவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் ஒருசில குறைகளையும் விஜய் தன்னுடைய மாஸ் பர்பார்மென்சால் நிவர்த்தி செய்துள்ளார்.

25வது நாள் கொண்டாட்டம்

25வது நாள் கொண்டாட்டம்

இந்நிலையில் படம் திரையரங்குகளில் 25 நாட்களை எட்டியுள்ளது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் தயாரிப்பு தரப்பும் சமூக வலைதளத்தில் இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்து படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

தளபதி 67 படம்

தளபதி 67 படம்

தற்போது தளபதி 67 கொண்டாட்டத்தில் ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே வாரிசு கொண்டாட்டமும் சேர்ந்துள்ளது. தளபதி 67 போன்ற ஒரு அழுத்தமான கதைக்களத்தில் நடிப்பதற்கு முன்னதாக குடும்ப சென்டிமெண்ட்டுடன் கூடிய ஒரு படத்தை தேர்ந்தெடுத்து விஜய் நடித்துள்ளது மிகவும் சிறப்பாகவே பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X