5 நாட்களில் 150 கோடி ரூபாயை தாண்டிய வாரிசுப்பட கலெக்ஷன்.. தயாரிப்பு தரப்பு அப்டேட்!
சென்னை : நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது வாரிசு படம்.
விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
படம் துவக்கத்தில் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சாதனை புரிந்து வருகிறது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த 11ம் தேதி பொங்கலையொட்டி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வசூல்மழையில் வாரிசு படம்
இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல்மழை பொழிந்து வருகிறது. இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் பேமிலி சென்டிமெண்டை மையமாக கொண்ட கதைக்களத்தில் நடித்துள்ளார். படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

அஜித்துடன் போட்டிப் போடும் விஜய்
படம் பொங்கலையொட்டி வெளியாகியுள்ள நிலையில், பொங்கல் விடுமுறை தொடர்ந்து வருவதால் வசூல்மழை பொழிந்து வருகிறது. இந்தப் படத்துடன் அஜித்தின் துணிவு படமும் ரிலீசாகியுள்ள நிலையில், இரண்டு படங்களும் தற்போது வசூலில் போட்டி போட்டு வருகின்றன.

வாரிசு படத்தின் சக்சஸ் மீட்
இதனிடையே வாரிசு படம் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், படத்தின் சக்சஸ் மீட்டை நேற்றைய தினம் படக்குழுவினருடன் நடிகர் விஜய் கொண்டாடி மகிழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் விஜய்யுடன் ராஷ்மிகா, படத்தின் இயக்குநர் வம்சி படிப்பள்ளி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜூ உள்ளிட்டவர்களும் பங்கேற்றுள்ளனர்.

5 நாட்களில் ரூ.150 கோடி வசூல்
இந்நிலையில் இந்தப் படத்தின் கலெக்ஷன் கடந்த 5 நாட்களில் சர்வதேச அளவில் 150 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக படத்தின் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்த போஸ்டர் ஒன்றையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், ஆட்டநாயகன் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளது.

லோகேஷுடன் தளபதி 67
நடிகர் விஜய் அடுத்ததாக தன்னுடைய தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாகவும் த்ரிஷா ஜோடி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தற்போது வாரிசு படமும் வெளியாகி வெற்றிப் படமாக விஜய்க்கு அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











