செப்டம்பரில் முடிவடையும் வாரிசு பட சூட்டிங்.. ஆனாலும் தளபதி 67 அறிவிப்புக்காகத்தான் வெயிட்டிங்!

சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக இரு தினங்களுக்கு முன்பு விஜய் விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்றார். இதன் விமானநிலைய வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் வாரிசு

நடிகர் விஜய்யின் வாரிசு

நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக இந்தப் படம் ரிலீசாக உள்ளது. பொங்கலையொட்டி இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேமிலி சென்டிமெண்ட் படம்

பேமிலி சென்டிமெண்ட் படம்

இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் அவருக்கு ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, ராதிகா, ஜெயசுதா, ஷாம் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. பேமிலி சென்டிமெண்ட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது.

மீண்டும் துவங்கிய சூட்டிங்

மீண்டும் துவங்கிய சூட்டிங்

சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூஜைப் போடப்பட்டு படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து ஐதராபாத், சென்னை மீண்டும் ஆந்திராவில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திராவில் மழை, தொழிலாளர்கள் ஸ்டிரைக் உள்ளிட்ட பிரச்சினைகளால் படத்தின் சூட்டிங் சிறிது பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் துவங்கும் தளபதி 67

அக்டோபரில் துவங்கும் தளபதி 67

விசாகப்பட்டினத்தில் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்துவிட்டு, தளபதி 67 படத்தில் விஜய் இணையவுள்ளார். அக்டோபர் மாதத்தில் அந்தப் படத்தின் சூட்டிங்கில் விஜய் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

செப்டம்பரில் நிறைவடையும் வாரிசு சூட்டிங்

செப்டம்பரில் நிறைவடையும் வாரிசு சூட்டிங்

இதனிடையே வாரிசு படத்தின் சூட்டிங் செப்டம்பர் மாதத்தில் நிறைவடையவுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்த மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்.

தளபதி 67 பட அறிவிப்பு?

தளபதி 67 பட அறிவிப்பு?

பீஸ்ட் படத்தையடுத்து சில மாதங்களிலேயே விஜய்யின் 66வது படமான வாரிசு வெளியாக உள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய பரிசுதான். இருந்தபோதிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இணையும் தளபதி 67 படமே அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

19(1)(a) Movie Review | Yessa ? Bussa ?| 19(1)(a)| Vijay Sethupathi |*Review
லோகேஷ் எதிர்கொள்ளும் கேள்விகள்

லோகேஷ் எதிர்கொள்ளும் கேள்விகள்

லோகேஷ் கலந்துக் கொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அனைவருடைய கேள்வியும் அந்தப் படத்தின் அப்டேட் குறித்தே காணப்படுகிறது. நேற்று மாலை மாணவர்களிடையே பேசிய லோகேஷ் அந்தப் படத்தை தவிர்த்து வேறு கேள்விகளை கேளுங்கள் என்று தானாகவே தெரிவித்திருந்தார். படத்தின் அறிவிப்புக்கு முன்பு தான் எதையும் கூற முடியாது என்று அவர் தெரிவித்த போதிலும், அனைவரும் இந்தக் கேள்வியையே ரிபீட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X