விஜய்யோட வாரிசு இசை வெளியீடு எப்பன்னு தெரியுமா? தெறிக்க காத்திருக்கும் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடையும் தருவாயில் உள்ளது. 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் துவக்கத்திற்குள்ளாக இந்தப் படத்தின் சூட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தை முடித்துவிட்டு விரைவில் தளபதி 67 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் எப்போதுமே புதுமை விரும்பிதான். அவர் புதுமையான கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அத்தகைய படங்களில் நடிக்க எப்போதும் ஆர்வம் காண்பிப்பார் என்று முன்னதாக ஒரு பேட்டியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அழகிய தமிழ் மகன் படம்

அழகிய தமிழ் மகன் படம்

அதற்கு ஏற்றாற்போலத்தான் சில வருடங்களுக்கு முன்பு வெளியான அழகிய தமிழ் மகன் என்ற படத்திலேயே விஜய் வில்லன் கேரக்டரை ஏற்று நடித்திருந்தார். அந்தக் கேரக்டர் சிறிதளவு பிசகியிருந்தாலும் அவரது கேரியர் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனாலும் அந்தக் கேரக்டரில் விரும்பித்தான் நடித்தார் விஜய்.

கேங்ஸ்டர் வேடத்தில் விஜய்

கேங்ஸ்டர் வேடத்தில் விஜய்

இதனிடையே தன்னுடைய கேரியரில் அடுத்ததாக கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இந்தப் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் 40 வயது கேங்ஸ்டராக விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் சமந்தா வில்லியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. த்ரிஷா விஜய்க்கு ஜோடி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விஜய்யின் 67வது படம்.

வாரிசு படத்தில் விஜய்

வாரிசு படத்தில் விஜய்

இதனிடையே பீஸ்ட் படத்திற்கு பிறகு தனது 66வது படமான வாரிசு படத்தில் தற்போது மும்முரமாக நடித்து வருகிறார் விஜய். இந்தப்படத்தின் சூட்டிங்கில் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாகவும் இன்னும் சில காட்சிகளை எடுத்து முடிக்க இயக்குநர் வம்சி படிப்பள்ளி மிகுந்த தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொங்கல் ரிலீஸ் படம்

பொங்கல் ரிலீஸ் படம்

படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள. படம் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ள நிலையில், அடுத்ததாக போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளும் மும்முரமாக நடைபெறவுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றன.

அட்டேட் இல்லாமல் ரசிகர்கள் தவிப்பு

அட்டேட் இல்லாமல் ரசிகர்கள் தவிப்பு

விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின. அதையடுத்து படத்தின் எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை. ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஆனந்தத்தையும் ஒருசேர கொடுக்கும்வகையில் படத்தின் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது லீக்காகின.

படத்தின் முதல் சிங்கிள்

படத்தின் முதல் சிங்கிள்

படத்தின் முதல் சிங்கிள் வரும் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் சூசகமாக தெரிவித்திருந்தார். ஆனால் இதுகுறித்த அறிவிப்பும் வெளியாகாமல்தான் உள்ளது. ஆனாலும் முதல் சிங்கிள் குறித்த இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

டிசம்பரில் இசை வெளியீடு?

டிசம்பரில் இசை வெளியீடு?

இந்நிலையில் விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்ததாக படத்தின் இசை வெளியீடு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. வரும் டிசம்பர் 4 அல்லது டிசம்பர் 11ம் தேதி படத்தின் இசை வெளியீடு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் -ராஷ்மிகா புகைப்படம்

விஜய் -ராஷ்மிகா புகைப்படம்

குடும்ப சென்டிமெண்ட்டுடன் விஜய் படத்திற்கேயுரிய ஆக்ஷன் காமெடி உள்ளிட்டவையும் இந்தப் படத்தில் சிறப்பாக அமையும் என்று முன்னதாக தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் விஜய் மற்றும் ராஷ்மிகாவின் செல்பி புகைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X