எல்லா படத்துலயும் சிலுவையை கொண்டுவரும் விஜய்.. என்ன மாதிரியான சென்டிமெண்ட்?
சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படம் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளது. இதையொட்டி பரபரப்பான போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.
படத்தின் முதல் சிங்கிள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி லட்சக்கணக்கிலான வியூஸ்களை பெற்றுள்ளது.
இதனிடையே படத்தின் இரண்டாவது சிங்கிள் வரும் 4ம் தேதி விஜய்யின் 30 ஆண்டு திரையுலகப் பயணத்தை கொண்டாடும்வகையில் வெளியாகவுள்ளது.

நடிகர் விஜய்யின் வாரிசு
நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. அடுத்தடுத்து 3 போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகின.

அடுத்தடுத்த இடங்களில் சூட்டிங்
இதையடுத்து தொடர்ந்து ஐதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டன. நேற்றைய தினம் தன்னுடைய சூட்டிங்கை விஜய் முடித்துள்ள நிலையில் வரும் 9ம் தேதி வரை படத்தின் சில பேட்ச் வேலைகள் நடைபெறவுள்ளதாக படக்குழு தரப்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

30 ஆண்டு திரைப்பயணம்
இதனிடையே தமிழ் திரையுலகில் தனது 30 ஆண்டு கொண்டாட்டத்தை வரும் 4ம் தேதி விஜய் கொண்டாடவுள்ளார். இதையொட்டி கடந்த சில தினங்களாகவே ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாட்டத் தருணங்களை மேற்கொண்டு வருகின்றனர். விஜய்யின் சிறப்பு டிபி மற்றும் காமன் டிபிக்கள் வெளியிடப்பட்டன. ராஷ்மிகா மந்தனா, பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தன.

2வது சிங்கிள் அறிவிப்பு
இதனிடையே விஜய்யின் 30 ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் வாரிசு படக்குழு வரும் 4ம் தேதி 4 மணியளவில் படத்தின் இரண்டாவது சிங்கிளை வெளியிடவுள்ளதாக இன்று மாலை அறிவித்துள்ளது. தீ தளபதி என்ற அந்தப் பாடல் குறித்த அறிவிப்பை தற்போது தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. முதல் பாடல் தற்போது 100 மில்லியன் வியூஸ்களை நோக்கி நடைபோட்டு வரும் நிலையில் தற்போது இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விமர்சனங்களை ஏற்படுத்திய செஸ் சிலுவை
இதனிடையே இந்தப் பாடலில் செஸ் சிலுவை காணப்படுவதாக வலதுசாரிகள் விமர்சனங்களை வைத்து வருவதை பார்க்க முடிகிறது. ஒரு சில விமர்சகர்களும் இந்த கருத்தை முன்வைத்து வருகின்றனர். ஒவ்வொரு படத்திலும் எப்படியாவது சிலுவையை கொண்டுவருவது தான் விஜய்யின் ஸ்பெஷல் என்றும் வம்சியும் விஜய்யிடம் சரண்டர் ஆகிவிட்டதாகவும் விமர்சனங்கள் கூறப்பட்டுள்ளன. முன்னதாக மெர்சல் உள்ளிட்ட படங்களிலும் விஜய் சிலுவையை பயன்படுத்தியதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.


Click it and Unblock the Notifications











