வாரிசு பிரமோஷன்ஸ்.. விஜய் எங்க போயிருக்காரு தெரியுமா.. சூப்பர் வீடியோ இதோ!
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ளது வாரிசு படம். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
படத்தின் பாடல் சூட்டிங் மட்டுமே மீதமுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படம் பொங்கலையொட்டி நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில் துபாயிலும் படத்தின் பிரமோஷனை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

விஜய்யின் வாரிசு படம்
நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தின் முதல் சிங்கிளுக்காக ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்கில் உள்ளனர்.

அப்டேட்டிற்காக வெயிட்டிங்
முன்னதாக விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதையடுத்து கடந்த சில மாதங்களாக படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் அதிகமான ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் படத்தின் சூட்டிங்கை முடித்து பொங்கலில் படத்தை வெளியிடும் அவசரத்தில் படக்குழு காணப்பட்டது.

முதல் பாடல் வெளியீடு
இதனிடையே தீபாவளியையொட்டி படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. விஜய் பாடியுள்ள படத்தின் டைட்டில் சாங் சூட்டிங் தற்போது நடைபெற்று வருவதால் அந்த பாடலை முதல் பாடலாக ரசிகர்களுக்கு கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் படத்தில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள பாடல் முதல் பாடலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விஜய் வாய்சில் வாரிசு பாடல்
ஆனால் விஜய் வாய்சில் உருவாகியுள்ள பாடலின் சூட்டிங்கை விரைவில் முடித்துக் கொண்டு, அந்தப் பாடலையே முதல் பாடலாக கொடுக்க தற்போது படக்குழு முடிவெடுத்துள்ளதால், முதல் பாடல் தீபாவளியையொட்டி வெளியாகாது என்றும், அறிவிப்பு மட்டும் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்கள் ஏமாற்றம்
இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். தீபாவளிக்கு விஜய்யின் படம் வெளியாகாவிட்டாலும் பாடலாவது வெளியாகும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பு தற்போது ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. இதனிடையே, இந்தப் படத்தின் பிரமோஷன்களை சிறப்பாக துபாயில் நடத்தவும் படக்குழு முடிவெடுத்துள்ளது.

துபாய் சென்ற விஜய்
இதனிடையே இன்றைய தினம் துபாய்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார் விஜய். இதையடுத்து அவரை விமானநிலையத்தில் பார்க்க முடிந்தது. மிகவும் ஸ்மார்ட்டான விஜய்யின் இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











