வாரிசு ஷுட்டிங் திடீரென நிறுத்தமா? ஏன் என்னாச்சு..அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள் !

சென்னை : வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர்.

வாரிசு என்ற தலைப்பில் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தை தில் ராஜூவின் நிறுவனம் தயாரித்து வருகிறது.

வாரிசு

வாரிசு

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சியின் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். விஜய் படங்களிலிருந்து சற்று மாறுபட்டு வித்யாசமாக நடிப்பில் உருவாகி வருவதாக சொல்லப்படும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

லீக்கான புகைப்படம்

லீக்கான புகைப்படம்

வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளைக்கு வெளியானது. ஆனால் அவ்வப்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்து வருவதால் அதிர்ச்சி அடைந்த படக்குழு, படப்பிடிப்பு தளத்தில் பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

குத்து பாடல்

குத்து பாடல்

தமன் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடல் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஓப்பனிங் நடிகர் விஜய் பாடியுள்ளதாகவும், அவருடன் சேர்ந்து அனிருத்தும் பாடியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இருப்பதாகவும், அதில் குத்து பாடல் ஒன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

படப்பிடிப்பு நிறுத்தமா?

படப்பிடிப்பு நிறுத்தமா?

இந்நிலையில், வாரிசு படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் வம்ஷிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஒரு வாரம் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர் அறிவுறுத்தி உள்ளதால், ஒரு வார ஓய்வுக்கு பிறகே படப்பிடிப்பு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X