மீண்டும் இணையும் வாரிசு டீம்.. அப்ப தளபதி 69 வம்சி கூடத்தானா?

சென்னை : நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதத்தில் வெளியானது வாரிசு படம்.

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை தில் ராஜூ தயாரித்திருந்தார்.

கடந்த மாதம் 11ம் தேதி பொங்கலையொட்டி வெளியான இந்தப் படம் சர்வதேச அளவில் 300 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படம்

வாரிசு படம்

நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரபு, சரத்குமார், ஜெயசுதா என நட்சத்திரப் பட்டாளமே நடித்து கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீசானது வாரிசு படம். பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி 67 படம் போன்ற அழுத்தமான கதையில் நடிப்பதற்கு முன்னதாக லைட்டான குடும்ப சென்டிமெண்ட் கதையில் நடித்திருந்தார் விஜய்.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

கதையென்று பார்த்தால் உடல்நிலை சரியில்லாமல் இன்னும் சிறிது காலத்தில் இறக்கும் நிலையில் உள்ள தந்தையின் பிசினசையும் குடும்பத்தையும் தூக்கி நிறுத்தும் இளையமகன் என்பதே கதைக்களம். அதை சிறப்பான திரைக்கதை மூலம் தூக்கி நிறுத்தியிருந்தார் வம்சி பைடிப்பள்ளி. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றுள்ளது.

ரூ300 கோடி வசூல்

ரூ300 கோடி வசூல்

சர்வதேச அளவில் படத்தின் வசூல் தற்போது 300 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய்யை பேமிலி சென்டிமெண்ட் கதைக்களத்தில் பார்ப்பதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தளபதி 67 படத்தில் விஜய்

தளபதி 67 படத்தில் விஜய்

வாரிசு படத்தின் வசூல்மழையை அடுத்து, தற்போது தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார் விஜய். படத்தின் அறிவிப்பு, நடிகர், நடிகைகள் குறித்த அப்டேட் உள்ளிட்டவை கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டது. தற்போது படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்தடுத்த அப்டேட்கள்

அடுத்தடுத்த அப்டேட்கள்

படத்தை விரைவில் சூட்டிங் முடித்து ரிலீஸ் செய்ய தயாரிப்புத்தரப்பு திட்டமிட்டுள்ள நிலையில், படத்தின் சூட்டிங்கை விரைந்து முடிக்கும் வகையில், படத்தின் மொத்த அப்டேட்களையும் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. படத்தின் டைட்டில் ப்ரோமோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மீண்டும் இணையும் வாரிசு டீம்

மீண்டும் இணையும் வாரிசு டீம்

இதனிடையே வாரிசு படத்தின் வசூல் வெற்றியை தொடர்ந்து அந்த டீம் மீண்டும் அடுத்த படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தளபதி 67 படத்தை லோகேஷ் இயக்கிவரும் சூழலில், தளபதி 68 படத்தை அட்லீ இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கதைக்களம் எப்படி இருக்கும்?

கதைக்களம் எப்படி இருக்கும்?

இதையடுத்து தளபதி 69 படத்திற்காக விஜய் -தில் ராஜூ மீண்டும் இணையவுள்ளதாகவும் அந்தப் படத்தை வம்சி பைடிப்பள்ளியே இயக்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி உறுதியானால், மீண்டும் எதுபோன்ற கதைக்களத்துடன் வம்சி, விஜய்யை அணுகுவார் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X