வாரிசு படத்தோட சூட்டிங் எப்ப நிறைவடையுதுன்னு தெரியுமா.. அடுத்தது என்ன தளபதி 67 தான்!
சென்னை : நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். இதன் சூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதன் பைட் சீன்கள் எண்ணூரில் நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து அடுத்ததாக டூயட் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.
இதனிடையே இதன் சூட்டிங்ங எப்போது நிறைவடையும் என்பது குறித்து தற்போது அப்டேட் வெளியாகியுள்ளது.

விஜய்யின் வாரிசு படம்
நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். இந்தப் படம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ள நிலையில், இந்த மாதத்திற்குள் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கவுள்ளன.

விரைவில் டூயட் காட்சிகள்
பீஸ்ட் படத்தின் ரிலீசின்போதே வாரிசு படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் மாறி மாறி சூட்டிங் நடத்தப்பட்டது. இதையடுத்து விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் சூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து எண்ணூரில் படத்தின் இறுதிக்கட்ட க்ளைமாஸ் காட்சிகளின் சூட்டிங் நடத்தப்பட்டது.

27ம் தேதி சூட்டிங் நிறைவு
இதையடுத்து சென்னையில் கோகுலம் ஸ்பாட்டில் படத்தின் டூயட் காட்சிகளுக்கான சூட்டிங் தற்போது நடத்தப்பட உள்ளது. இதையடுத்து இந்தப்படத்தின் சூட்டிங் வரும் 27ம் தேதியுடன் நிறைவடையவுள்ளதாக படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர். மேலும் தீபாவளியையொட்டி படத்தின் முதல் பாடல் வரும் 24ம் தேதி வெளியாகவுள்ளது.

தளபதி 67 படத்தின் அறிவிப்பு
முன்னதாக தீபாவளியையொட்டி வரும் 23ம் தேதி தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ள நிலையில் சிறிது இடைவெளியை தொடர்ந்து தளபதி 67 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கலக்கல் தீபாவளி
தீபாவளியையொட்டி தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு மிகவும கலக்கலாகவே அமையவுள்ளது. வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், தளபதி 67 படத்தின் அறிவிப்பு என களைகட்டவுள்ளது. பொங்கலுக்கு வாரிசு ரிலீசாகவுள்ள நிலையில் முன்னதாக தீபாவளிக்கே அதை கொண்டாட ரசிகர்களை தயாராகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











