Vijay Home Tour - பைப்ல ஏறிதான் வீட்டுக்குள்ள வருவாரு.. விஜய் வீட்டை பார்த்துருக்கீங்களா

சென்னை: நடிகரும், இயக்குநர் எஸ்.சந்திரசேகரின் மகனுமான விஜய்யின் ஹோம் டூர். வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதனை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

நடிகர் விஜய் முன்னணி நடிகராக இருக்கிறார். கடைசியாக அவர் நடித்த வாரிசு படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை பெரிதாக்கலாம் என நினைத்திருந்த விஜய்க்கு வாரிசு சறுக்கலையே கொடுத்தது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகும் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

Actor Vijays Virugambakkam Home Tour

நீலாங்கரையில் விஜய்: விஜய் இப்போது தனது மனைவி சங்கீதாவுடன் நீலாங்கரையில் தனியாக வசித்துவருகிறார். அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா ஆகிய இருவரும் அடையாறில் வசித்துவருகின்றனர். விஜய்யையும், அவரது வீட்டையும் எப்படியாவது பார்த்து விட வேண்டும் என ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில்கூட ஒரு இளம்பெண் விஜய்யின் வீட்டு கதவு முன்பு கதறி அழுதபடி நின்ற வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

விருகம்பாக்கம் வீடு: விஜய் இப்போது நீலாங்கரையில் வசித்துவந்தாலும் அவரது ஆரம்ப காலத்தில் விருகம்பாக்கத்தில்தான் வசித்துவந்தார். இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் பீக்கில் இருந்தபோது வந்த சம்பாதியத்தை வைத்து அந்த வீட்டை பிரமாண்டமாக கட்டி தனது மனைவிக்கும், மகனுக்கும் பரிசாக கொடுத்தார். இப்போது அந்த ஹோம் டூர் குறித்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

எப்படி இருக்கு வீடு: விஜய்யின் விருகம்பாக்கம் வீடு மொத்தம் 8700 ஸ்கொர்யர் ஃபிட் ஆகும். விஜய்க்கு ஏழு வயது இருக்கும்போது இந்த வீடு கட்டப்பட்டிருக்கிறது. வீட்டுக்குள் நுழைந்ததும் மிகப்பெரிய ஹால் ஒன்று இருக்கிறது. ஹாலுக்கு அருகிலேயே டைனிங் ஹாலும், அதற்கு நேர் எதிராக அடுப்பறையும் இருக்கிறது. ஹாலுக்குள்ளேயே படிக்கட்டு வைத்து முதல் தளத்துக்கு செல்லும்படி வசதி அமைக்கப்பட்டிருக்கிறது.

Actor Vijays Virugambakkam Home Tour

வீட்டுக்குள் தனி வீடு: இந்த வீட்டில் ஸ்பெஷல் என்னவென்றால் வீட்டுக்குள்ளேயே ஒரு தனிவீடு. அதாவது முதல் தளத்தில் ஏறியவுடன் விஜய்க்கென்று தனி அறை ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. பேச்சிலர்களுக்கான ரூம் போல் அது இருந்தாலும் சகல வசதிகளும் அதில் செய்யப்பட்டிருக்கின்றன. விஜய் தனது ரசிகர்களை சந்திப்பதற்கு ஏதுவாக அந்த ரூமை ஒட்டி ஒரு பால்கனி அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், அந்த ரூமில்தான் விஜய்க்கு பல இயக்குநர்கள் கதை சொல்லியிருக்கின்றனர்.

அதேபோல் எஸ்.ஏ.சந்திரசேகரின் மாஸ்டர் பெட்ரூமும் அங்குதான் அமைந்திருக்கிறது. அங்கும் ஒரு அடுப்பறை அமைக்கப்பட்டிருக்கிறது. விஜய் சிறிய வயதில் பள்ளியை முடித்துவிட்டு கதவு வழியாக வீட்டுக்குள் வரமாட்டாராம். மாறாக ஒரு பைப்பில் ஏறி முதல் தளத்துக்கு வந்து தனது தந்தைக்கும், தாய்க்கும் சர்ப்ரைஸ் கொடுப்பாராம்.

Actor Vijays Virugambakkam Home Tour

அம்மாவுக்கென்று தனி ரூம்: விஜய்யின் அறைக்கு பக்கத்திலேயே அவரது பாட்டிக்கென்று தனி அறை கட்டப்பட்டிருக்கிறது. எஸ்.ஏ.சியின் அம்மா தீவிர இறை பக்தர் என்பதால் ஒரு நாளைக்கு மொத்தம் 16 மணி நேரம் பிரார்த்தனை செய்வாராம். குறிப்பாக, விஜய்க்கு அந்த ரூம் ஒதுக்கப்படிருந்தாலும், தனது பாட்டியின் ரூமிலேயே அவர் அதிகம் படுத்திருக்கிறார்.

விஜய் ஆண்டனி: பல வருடங்கள் அந்த வீட்டில் இருந்துவிட்டு நீலாங்கரை, அடையாறு ஆகிய பகுதிகளுக்கு விஜய்யின் குடும்பம் சென்றுவிட்டதால் விஜய் ஆண்டனி அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறார். முதலில் கீழ் தளத்தில் ஸ்டூடியோ, ஆஃபிஸை வைத்திருந்த அவர்; இப்போது ராதாகிருஷ்ணன் சாலையில் வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டதால் தனது அலுவலகத்தை மட்டும் விஜய்யின் விருகம்பாக்கம் வீட்டில் தொடர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X