twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    20 ஆண்டுகளை கடந்த விஜய்யின் "யூத்".. அட விஜய் எப்பவுமே யூத் தானப்பா!

    |

    சென்னை: தளபதி விஜய், சந்தியா நடித்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் யூத்.

    இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் மணி ஷர்மா, இப்படத்தை இயக்கியவர் வின்சென்ட் செல்வா.

    விஜய்யின் யூத் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் விஜய் ரசிகர்கள் இதனை ட்ரண்டாக்கி வருகின்றனர் .

    நோட்டீஸ் அனுப்பிய நெட்ஃபிளிக்ஸ்? நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா? நோட்டீஸ் அனுப்பிய நெட்ஃபிளிக்ஸ்? நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

    ஸ்கோர் செய்த நடிகர்கள்

    ஸ்கோர் செய்த நடிகர்கள்

    விஜய், சந்தியா, சிந்து மேனன், விவேக், விஜயகுமார், மணிவண்ணன் போன்ற பலரும் யூத் திரைப்படத்தில் நடித்திருந்தனர். சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் விஜய். விஜய் நடித்த ஹிட் லிஸ்ட் படங்களில் யூத் திரைப்படமும் ஒன்று. சமையல்காரனான விஜய்யை திருமணம் செய்து கொள்ள மறுத்து திருமண நாள் அன்று வீட்டை விட்டு ஓடி போகும் சிந்து மேனன், விஜய் மற்றும் சந்தியாவின் காதல், கருத்து கந்தசாமியாக விவேக், தங்களது நடிப்பால் ஸ்கோர் செய்து இருப்பார்கள்.

    வில்லனாக யுகேந்திரன்

    வில்லனாக யுகேந்திரன்

    யுகேந்திரன், பிரதாப் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருப்பார். பிரதாப்பை காதலித்து வீட்டை விட்டுப் போகும் சிந்து மேனன், அவர் கெட்டவர் என்று தெரிந்ததும் திரும்பவும் வீட்டுக்கு வர தயங்குவார். தன்னை கைவிட்டவள் என்று தெரிந்தும் சிந்து மேனனை அரவணைத்து அட்வைஸ் செய்யும் விஜய் எப்பொழுதும் யூத் தான். 2கே கிட்ஸ் ஃபேவரைட் படமான யூத் படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சீனும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.

    பில்ட் அப் இல்லாத கதை

    பில்ட் அப் இல்லாத கதை

    ஓவர் பில்டப் இல்லாமல் எதார்த்தமாக வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களை சுவாரசியமாக சொல்லி இருப்பார் இயக்குனர் வின்சென்ட் செல்வா. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. சர்க்கரை நிலவே, ஆல்தோட்ட பூபதி போன்ற பாடல்கள் அந்த படத்தின் சூப்பர் ஹிட் பாடல் ஆகவும் அமைந்தது. ஆல்தோட்ட பூபதி பாட்டில் சிம்ரன் டான்ஸ் ஆடி இருப்பார். ஒரு பாட்டுக்கு மட்டும் வந்தாலுமே அனைத்து ரசிகர்கள் மனதையும் ஆட்டி படைத்தார் சிம்ரன். அன்று முதல் இன்று வரை இந்த பாடலுக்கு பல ரசிகர்களும் இருக்கின்றனர்.

    Recommended Video

    Thalapathy வேற Level | Vijay பெயரில் இரத்ததான Mobile App *kollywood | Filmibeat Tamil
    எப்பவுமே யூத் தான்

    எப்பவுமே யூத் தான்

    மதன் பாப், பாஸ்கி, பாத்திமா பாபு போன்ற பலரும் துணைக்கதாபாத்திரத்தில் நடித்து படத்திற்கு பலம் சேர்த்து இருப்பார்கள். படத்தின் நாயகியான சந்தியா தமிழில் இந்த ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தார். விஜய்யின் ஹிட் லிஸ்ட் படத்தில் ஒன்றான யூத் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். 20 வருஷம் இல்ல இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் தளபதி எப்பவுமே யூத் தான் என்று தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

    English summary
    Actor Vijay’s Youth Movie Trending in Social Media Since it has Completed 20 Years
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X