வாரிசு படம் விஜய்க்கு ரொம்ப ஸ்பெஷலாம்.. காரணம் சொன்ன விஜய்!

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது வாரிசு படம்.

இந்தப் படத்தில் குடும்ப சென்டிமெண்டை தூக்கலாக பயன்படுத்தியிருந்தார் தெலுங்குப்பட இயக்குநர் வம்சி பைடிபள்ளி.

படம் சர்வதேச அளவில் 300 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக தயாரிப்பு தரப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் 11ம் தேதி பொங்கலையொட்டி வெளியானது வாரிசு படம். இந்தப் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியான நிலையில், குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், வசூலில் மிரட்டியது.

ஓடிடியில் ரிலீஸ்

ஓடிடியில் ரிலீஸ்

தெலுங்குப்பட இயக்குநர் வம்சி பைடிபள்ளி டைரக்ஷனில் உருவான இந்தப் படம் சர்வதேச அளவில் 300 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்தது. ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் இந்தப்படம் வரும் 22ம் தேதி ஓடிடியிலும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி 67 சூட்டிங்கில் விஜய்

தளபதி 67 சூட்டிங்கில் விஜய்

இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தளபதி 67 படத்தின் சூட்டிங்கில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைந்துள்ளார் விஜய். படத்தின் சூட்டிங் தற்போது காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெற்று வருகிறது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வாரிசு மிகவும் ஸ்பெஷல்

வாரிசு மிகவும் ஸ்பெஷல்

இந்நிலையில் வாரிசு படம் தனக்கு மிகவும் ஸ்பெஷல் என்று விஜய் தெரிவித்துள்ளார். பணக்கார பின்புலத்தில் படத்தின் கதை இருந்தாலும் படத்தில் அதிகமாக பேசப்பட்டுள்ள எமோஷன்கள் மற்றும் குடும்ப சென்டிமெண்ட் தனக்கு மிகவும் பிடித்தமானதாக அமைந்ததாக விஜய் தெரிவித்துள்ளார்.

நட்சத்திரப் பட்டாளம்

நட்சத்திரப் பட்டாளம்

வாரிசு படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, ஷாம், உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள நிலையில், நீண்ட காலங்களுக்கு பிறகு இத்தகைய குடும்ப சென்டிமெண்ட் கதையில் நடிகர் விஜய் நடித்திருந்தார். இதனால் இந்தப் படம் ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக அமைந்திருந்தது.

விஜய்யின் காமெடி கலாட்டா

விஜய்யின் காமெடி கலாட்டா

குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாகியிருந்தாலும் வாரிசு படத்தில் விஜய் படங்களுக்கேயுரிய ஆக்ஷன், காமெடி என அனைத்தும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருந்தன. யோகிபாபுவுடன் இணைந்து விஜய் இந்தப் படத்தில் காமெடி கலாட்டாவில் ஈடுபட்டிருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X