Actor Vijay: ஏப்ரல் 19ம் தேதிக்குள் GOAT பட சூட்டிங் நிறைவு? தேர்தலின்போது நாடு திரும்ப விஜய் முடிவு

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது. இந்தப் படத்தினை நடிகர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு வேறு கேரக்டர்களில் விஜய் நடித்து வருகிறார். தற்போது மாஸ்கோவில் துவங்கியுள்ள இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து இரு வாரங்கள் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வரும் 19ம் தேதி தமிழகத்தில் ஒரேகட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் விஜய் சூட்டிங்கிற்காக மாஸ்கோ சென்றுள்ளதால் அவர் தேர்தலில் வாக்களிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது மாஸ்கோவில் துவங்கியுள்ள சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு தேர்தலுக்கு முன்னதாக நாடு திரும்புவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

Actor Vijay Seems to back chennai from GOAT movie shooting in Moscow before loksabha elections

நடிகர் விஜய்: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் இணைந்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் மாஸ்கோவில் தொடங்கியுள்ள சூழலில் தொடர்ந்து இரு வாரங்களுக்கு அங்கு சூட்டிங்கை படக்குழு தொடர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை என்றும் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் முன்னதாக விஜய் அறிவித்திருந்தார் தொடர்ந்து தன்னுடைய கட்சியில் உறுப்பினர் சேர்க்கையிலும் ஈடுபட்டு வருகிறார்.

தளபதி 69 படம்: தற்போது நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தின் ஷூட்டிங்கில் வரும் ஜூன் மாதத்தில் விஜய் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த இரு படங்களை தொடர்ந்து அவர் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தாலும் அவரது அரசியல் என்ட்ரி மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. தற்போது ஏறக்குறைய ஒரு படத்திற்கு 250 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருகிறார் விஜய். மிகப்பெரிய உயரத்தில் விஜய் இருக்கும் தருணத்தில் நடிப்பை விட்டு விலக உள்ளதாக அறிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்க செய்துள்ளது.

தளபதி 69 பட இயக்குநர்?: இந்நிலையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் தளபதி 69 படங்கள் மிகுந்த கவனத்தை மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. தற்போது நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகிவருகிறது. இந்தப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் அடுத்ததாக உருவாக உள்ள தளபதி 69 படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த அறிவிப்பை விரைவில் விஜய் வெளியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள சூழலில் படம் அரசியல் ஜானரில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தலில் வாக்களிப்பாரா விஜய்?: தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று கூறியுள்ள நடிகர், விஜய் தேர்தல் நேரத்தில் வெளிநாடு சென்றுள்ளார். வழக்கமாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின்போது எளிமையாக சைக்கிளில் வந்து வாக்களிக்கும் வழக்கத்தை கொண்டவர் விஜய். தன்னுடைய ஜனநாயக கடமையை சிறப்பாக ஆற்றிவரும் விஜய், தற்போது தேர்தலின் போது வெளிநாட்டிற்கு ஷூட்டிங்கிற்காக சென்றது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளன. இந்நிலையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து இரு வாரங்களுக்கு மாஸ்கோவில் நடக்கவுள்ளது. தொடர்ந்து ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன் நாடு திரும்பும் விஜய்?: இதையடுத்து வரும் 19ம் தேதிக்குள் ஷூட்டிங்கை ஒட்டுமொத்தமாக நிறைவு செய்துவிட்டு நடிகர் விஜய் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அவர் நாடாளுமன்ற தேர்தலில் தன்னுடைய வாக்கை பதிவு செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X