Vijay: அட்லி இயக்கத்தில் இணைகிறாரா விஜய்?.. அப்ப தளபதி 69 கடைசி படம் இல்லையா?

சென்னை: நடிகர் விஜய் அடுத்தடுத்த சிறப்பான மூவ்களை கொடுத்து வருகிறார். ஒருபுறம் தன்னுடைய கடைசி படமாக அறிவிக்கப்பட்டுள்ள தளபதி 69 படத்தின் சூட்டிங்கை கடந்த மாதம் 6ம் தேதி துவங்கி முதல் ஷெட்யூலை நிறைவு செய்துள்ளார். அடுத்ததாக தன்னுடைய கட்சி மாநாட்டிற்கான பணிகளை ஜரூராக தன்னுடைய டீமுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறார்.

வரும் 27ம் தேதி தவெக மாநாடு நடக்கவுள்ள நிலையில் விஜய்யுடன் இணைந்து கட்சி நிர்வாகிகள் அனைவரும் இந்த முதல் மாநாட்டிற்கான பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்துவிட்டு அடுத்த மாதம் முதல் வாரத்தில் மீண்டும் தளபதி 69 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் விஜய்.

vijay thalapathy 69 movie atlee

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த திட்டமிடல்கள் சிறப்பாக அமைந்து வருகிறது. ஒருபுறம் தன்னுடைய கடைசி படமான தளபதி 69 படத்தின் வேலைகளை துவங்கியுள்ள விஜய், தன்னுடைய தவெக மாநாட்டிற்கான பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளார். இந்த மாநாட்டிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்த பணிகளில் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதிக கூட்ட நெரிசல், மாநாட்டில் பிரச்சினையை உண்டு செய்யலாம் என்று முன்னதாகவே கணித்து, வயதானவர்கள், கர்ப்பிணிகள் என யாரும் தன்னுடைய மாநாட்டிற்கு வர வேண்டாம் என்று விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை கவனத்தை பெற்றுள்ளது.

தளபதி 69 படம்: கடந்த 5ம் தேதி விஜய்யின் கடைசி படமாக அறிவிக்கப்பட்டுள்ள தளபதி 69 படத்தின் பூஜை போடப்பட்டது. இதையடுத்து 6ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. 5 நாட்கள் இந்த படத்தின் முதல் ஷெட்யூல் பாடல் காட்சியாக திட்டமிடப்பட்ட நிலையில், 4 நாட்களிலேயே இந்தப் பாடல் காட்சியின் சூட்டிங்கை முடித்துக் கொடுத்துள்ளார் விஜய். அடுத்ததாக அவரது கட்சி மாநாட்டிற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் முதல் வாரத்தில் தளபதி 69 படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் துவங்கவுள்ளதாக படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர்.

விஜய் -அட்லி கூட்டணி: தளபதி 69 படம்தான் தன்னுடைய இறுதிப்படம் என விஜய் அறிவித்துள்ள நிலையில், அடுத்ததாக அவர் இயக்குநர் அட்லியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் -அட்லி காம்பினேஷன் மிகவும் சிறப்பானது. இந்தக் கூட்டணி தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த படங்களை ஹாட்ரிக் வெற்றியாக்கி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில், இவர்கள் கூட்டணி தளபதி 69லிலேயே உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே அட்லி அடுத்ததாக சல்மான்கான் மற்றும் கமல்ஹாசன் காம்பினேஷனில் அடுத்தப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் மீண்டும் விஜய்?:இந்தப் படத்தில்தான் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் மாஸான பாடல் காட்சியில் நடிகர் விஜய் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு நடிகர் விஜய்யும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவ்லகள் தெறிவிக்கின்றன. நடிகர் விஜய் 69 படங்களுடன் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இது அவரது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளதை மறுக்க முடியாது. இந்நிலையில் கேமியோ கேரக்டரில் அட்லி இயக்கத்தில் விஜய் இணையவுள்ளதாக கூறப்படும் இந்த தகவல் அவர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X