Vijay Speech: நீயெல்லாம் என்ன படிச்சிட்ட.. அட்வைஸ் பண்ண வர.. செல்ஃப் ட்ரோல் செய்த விஜய்!

சென்னை: நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தொகுதி வாரியாக முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி உள்ளார்.

மாற்றுத்திறனாளி மாணவர்களும் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருப்பதை பார்த்து அவர்கள் அருகே உள்ள இருக்கையிலேயே அமர்ந்து கண்ணீர் விட்டு அவர்களை வாழ்த்தினார்.

அதன் பின்னர் மேடை ஏறி நறுக்கென சில நிமிடங்களே பேசிய விஜய் தன்னை பற்றியே செல்ஃப் ட்ரோல் அடித்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

Actor Vijay self trolling himself while honors students today

செம ஹேண்ட்ஸம் லுக்: லியோ படத்தின் ப்ரோமோவில் சிங்கம் போன்ற ஹேர்ஸ்டைல் உடன் வயதானவர் தோற்றத்தில் விஜய் காட்சி தந்த நிலையில், படம் முழுக்க இப்படித்தான் வரப் போகிறாரா என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், வேறலெவல் கெட்டப்பில் செம ஹேண்ட்ஸம் ஆக மாறி உள்ள விஜய்யின் லேட்டஸ்ட் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் விஜய் வீட்டில் இருந்து காரில் கிளம்பியதில் இருந்தே மாஸ்டர் படத்தில் வருவது போல ஒரு பெரும் இளைஞர்கள் படையே விஜய்யுடன் திரண்டு விழா மேடைக்கு வந்தார் விஜய்.

விஜய் பேச்சு: படிப்புதான் முக்கியம் என மாணவர்களுக்கு அசுரன் பட பாணியில் பேசிய விஜய் சுருக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டார். ஆனால், ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசுவதை போலவே நச்சென்று விஜய் பேசியது ஒட்டுமொத்த மாணவர்களை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதீங்க, தன் விரலை வைத்தே கண்ணைக் குத்துவது, அதிக காசு வாங்குபவன் அதற்கு முன்பாக எப்படி சம்பாதித்து இருப்பான்னு யோசிங்க என அரசியலையும் அப்படியே அள்ளித் தெளித்திருந்தார்.

சோஷியல் மீடியா: சோஷியல் மீடியாவில் டார்கெட் செய்து வெளியிடப்படும் சில நெகட்டிவ் தகவல்களை நீங்க தான் பிரித்துப் பார்த்து உங்க வாழ்க்கையை நல்லபடியா கொண்டு செல்லணும். அனைத்தையும் நம்பிக் கொண்டு உங்களை டீமோடிவ் பண்றவங்க பேச்சைக் கேட்டு வாழாதீங்க என பாசிட்டிவாகவே பேசி உள்ளார்.

செல்ஃபி ட்ரோல்: மாணவர்களுக்கு படிப்புக் குறித்த அறிவுரைகளை வழங்கிய வந்த விஜய் திடீரென நீயெல்லாம் என்னத்த படிச்ச, இப்படி அறிவுரை சொல்ல வந்துட்டன்னு சிலர் நினைக்கலாம். நானும் அப்படித்தான் படிப்பு வாசமே இல்லாமல் இருந்தேன். ஆனால், இப்போ கொஞ்சம் கொஞ்சமாக அதன் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டேன்.

அம்பேத்கரை படிங்க, அண்ணாவை படிங்க, பெரியாரை படிங்க, காமராஜரை படிங்க, பள்ளிப் பாடப்புத்தகத்தை தாண்டியும் நிறைய நல்ல விஷயத்தை படிங்க என விஜய் அட்வைஸ் செய்ததும் அரங்கமே கரவொலியை எழுப்பி ஆரவாரம் செய்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X