Vijay sethupathi: இந்த வயசுலயும் அந்த வித்தை தெரிஞ்சிருக்கு.. ரஜினி குறித்து விஜய் சேதுபதி ஓபன்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மகாராஜா படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை குரங்கு பொம்மை படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டியுள்ளன.
படம் வரும் 14ம் தேதி ரிலீசாகவுள்ள சூழலில் படத்திற்கான பிரமோஷன்களில் தற்போது விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி சலூன் கடை வைத்திருப்பதாக காட்டப்பட்டுள்ள சூழலில் படம் குறித்தும் தான் முன்னதாக இணைந்து நடித்திருந்த ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் குறித்தும் விஜய் சேதுபதி பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ளது மகாராஜா. இந்தப் படத்தை குரங்கு பொம்மை படத்தின் மூலம் கவனம் பெற்ற நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், முனீஸ்காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, பிஎல் தேனப்பன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் படத்தின் ட்ரெயிலர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்த படம் வரும் 14ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் படத்தின் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மகாராஜா படம்: குறிப்பாக தாயே தாயே என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது. படத்திற்கு அஜனிஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. இதில் இதுவரை இல்லாத வகையில் புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதியை பார்க்க முடிந்தது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெயிலரும் மாஸாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. லட்சுமியை காணவில்லை என்று விஜய் சேதுபதி இந்த ட்ரெயிலரில் போலீசாரிடம் புகார் கொடுப்பதாக காணப்பட்டது. ஆனால் கடைசிவரை யார் அந்த லட்சுமி என்பது குறித்து வெளிப்படுத்தாமலேயே இந்த ட்ரெயிலர் சஸ்பென்சாக நிறைவடைந்தது.
மகாராஜா பட பிரமோஷன்கள்: இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாக உள்ள சூழலில் நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார். மகாராஜா படம் குறித்தும் தான் இணைந்து நடித்த சக நடிகர்கள் குறித்தும் அவர் பல்வேறு சுவாரஸ்யங்களை வெளிப்படுத்தி வருகிறார். முன்னதாக பேட்ட படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார் விஜய் சேதுபதி. அது குறித்து கேட்டபோது தான் மிகவும் வியந்து பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த் என்று இந்த வயதிலும் ரசிகர்களை கட்டிப்போடும் வித்தையை அவர் பெற்றுள்ளதாகவும் அவருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை தான் எப்படி மிஸ் செய்வேன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஜினி குறித்து பாராட்டு: ரஜினி குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதனிடையே தான் விரைவில் இயக்குநராக மாறுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். அதிரடி திரில்லர் படமாக மகாராஜா படம் உருவாகியுள்ள சூழலில் இந்தப் படம் விஜய் சேதுபதிக்கு மேலும் வெற்றியை தரும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படம் திரையரங்குகளில் மாஸ் காட்டிய பின்பு விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











