ஹீரோக்கள் வளமையாகவே இருக்கிறார்கள்.. அவர்களுக்காக அடித்துக் கொள்ளாதீர்கள்.. விஜய் சேதுபதி அட்வைஸ்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து சிறப்பான மற்றும் வித்தியாசமான கதைக்களங்களில் படங்களை கொடுத்து வருகிறார்.

அவரது விக்ரம், மாமனிதன், காத்து வாக்குல ரெண்டு காதல் என 3 படங்களுமே வித்தியாசமான ஜானர்களில் ரசிகர்களை கவர்ந்தவை.

நடிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து பல மேடைகளில் நடிகர் விஜய் சேதுபதி மாணவர்கள் உள்ளிட்டவர்களுடன் உரையாடி வருகிறார்.

 நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வருகிறார். இவரது பல படங்கள் சமூக அக்கறையுடன் வெளிவரும் சூழலில், சில படங்களில் வில்லன் கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். எப்போதும் இயல்பாக ரசிகர்களை கவர்ந்துவரும் நடிகர் விஜய் சேதுபதி படங்களிலும் அதே பாணியை பின்பற்றுகிறார்.

அதிகமான வில்லன் கேரக்டர்கள்

அதிகமான வில்லன் கேரக்டர்கள்

நடிகர்கள் விஜய், கமல், ரஜினி உள்ளிட்டவர்களுடன் இணைந்து வில்லனாக நடித்துவிட்டார் விஜய் சேதுபதி. தற்போது பாலிவுட்டிலும் ஷாருக்கிற்கு வில்லனாக நடித்து வருகிறார். இவருக்கு வில்லன் கேரக்டர்கள் சரியாக அமைந்துவருவதால் அடுத்தடுத்து வில்லன் கேரக்டர்கள் இவரைத் தேடி வருகின்றன.

வித்தியாசமான கதைக்களங்கள்

வித்தியாசமான கதைக்களங்கள்

சமீபத்தில் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம் மற்றும் மாமனிதன் என 3 படங்களுமே மூன்று ஜானர்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதனிடையே அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. பாலிவுட்டிலும் சில படங்களில் தொடர்ந்து கமிட்டாகி நடித்து வருகிறார்.

 மாணவர்களுடன் உரையாடல்

மாணவர்களுடன் உரையாடல்

இதனிடையே படங்களில் நடிப்பதுடன் சமூக வெளிகளிலும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் இவர் தொடர்ந்து மாணவர்களுடன் உரையாற்றி வருகிறார். அப்போது பல விஷயங்களை பற்றி அவர் பேசி வருகிறார்.

விஜய் சேதுபதி வீடியோ

விஜய் சேதுபதி வீடியோ

அதுபோல விஜய் சேதுபதி பேசியுள்ள ஒரு பேச்சின் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர்களுக்காக சமூக வலைதளங்களில் அடித்துக் கொள்வது அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டியுள்ள அவர், நடிகர்கள் வளமையாகவே உள்ளதாகவும் அவர்களுக்காக அடித்துக் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கேவலமாக பேசிக் கொள்ளாதீர்கள்

கேவலமாக பேசிக் கொள்ளாதீர்கள்

இதுபோல அடித்துக் கொள்ளும் ரசிகர்கள், எதிர்தரப்பினரது குடும்பத்தையும் கேவலமாக பேசும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை நிறுத்திக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். தன்னை யாராவது திட்டினாலும் கண்டுக்கொள்ள வேண்டாம் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு தான் கூறிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X