பரத்துடன் கூட்டணி வைத்த விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு… மிரட்டலாக வெளியாகப் போகும் மிரள் டீசர்
சென்னை: ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் பரத்.
பரத் நடிப்பில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகும் மிரள் படத்தை சக்திவேல் இயக்குகிறார்.
பரத்துடன் வாணி போஜன் நடித்து வரும் மிரள் படத்தின் டீசர் ரிலீஸ் பற்றி படக்குழு அறிவித்துள்ளது.

பாய்ஸ் ஹீரோ பரத்
2003ல் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் முற்றிலும் புதுமுகங்களை அறிமுகப்படுத்தினார். சித்தார்த், பரத், மணிகண்டன், தமன், நகுல், ஜெனிலியா ஆகியோர் பாய்ஸ் படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகினர். இதில், தமன் இப்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வருகிறார். சமீபத்தில் தேசிய விருது பெற்ற தமன், இப்போது விஜய்யின் வாரிசு படத்திற்கும் மியூசிக் கம்போஸ் செய்து வருகிறார். இந்நிலையில், பரத் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார்.

ஹாரர் திரில்லரில் மிரள்
பாலிவுட்டில் சல்மான் கானுடன் ராதே, மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் குரூப் ஆகிய படங்களில் நடித்த பரத், தமிழில் மிரள் படத்தில் ஹீரோ ரோலில் நடித்து வருகிறார். மரகத நாணயம், ராட்சசன், பேச்சுலர் என வித்தியாசமான படங்களை தயாரிக்கும் ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி, பரத்தின் 'மிரள்' படத்தையும் தயாரித்துள்ளது. சக்திவேல் இயக்கும் இந்தப் படத்தில் பரத்துடன் வாணி போஜனும் லீட் ரோலில் நடித்துள்ளார். ஏற்கனவே மிரள் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.

மிரள் டீசர் அப்டேட்
மிரள் மோஷன் போஸ்டர் மிகவும் வித்தியாசமாகவும் கொடூரமாகவும் வெளியாகி வைரலானது. கதிகலங்க வைக்கும் ஹாரர் திரில்லர் படமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், மிரள் படத்தின் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நாளை டீசர் வெளியாகவுள்ளதால், விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு கன்ஃபார்ம் செய்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு
இந்நிலையில், மிரள் படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் வெளியிடுகின்றனர். இதனை நடிகர் பரத் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதேபோல் தயாரிப்பு நிறுவனமும் டீசர் வெளியீடு பற்றி அபிஸியலாக அறிவித்துள்ளது. பரத்துக்கு இந்தப் படம் மிகப் பெரிய கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்திலும் பரத் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இது திரைப்படமா அல்லது வெப் சீரிஸ்ஸா என்பது மட்டும் இன்னும் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











