நான் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன்.. என்றும் மனிதன் தான் முக்கியம்.. விஜய்சேதுதி பளீர் பேச்சு !
சென்னை : நடிகர் விஜய்சேதுபதி கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்றும் மனிதன் தான் முக்கியம் என்றும் கூறினார்.
Recommended Video
வாக்குப்பதிவு தொடங்கியது முதலே நடிகர், நடிகைகள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 41.79% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரிசையில் நின்று
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதன் காரணமாக வாக்குச்சாவடிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திரைப்பிரபலங்கள்
அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் இன்று காலை முதலே தங்களது தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

விஜய்சேதுபதி
மக்களின் மனங்களை வென்ற மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கோடம்பாக்கத்தில் உள்ள காப்ரேஷன் காலனியில் தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்றும் மனிதன் தான் முக்கியம் என்றும் பேட்டியளித்தார்.

நடிகை ஸ்நேகா
அதே போல புன்னகை அரசி ஸ்நேகாவும் டிநகரில் உள்ள கேசரி மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். இவரது கணவர் பிரசன்னா காலையிலே நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்திவிட்டார்.


Click it and Unblock the Notifications











