Viduthalai 2: விடுதலை 2 படத்திற்காக அமெரிக்கா பறக்கும் வெற்றிமாறன் & விஜய் சேதுபதி.. என்ன காரணம்?

சென்னை: நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவருகிறது விடுதலை 2 படம். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் ஒரு ஆண்டை கடந்து நடந்து வருகிறது. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அதிர்வுகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது விடுதலை. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நாயகனாக மிகச்சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார் சூரி. குமரேசன் என்ற கான்ஸ்டபிள் ரோலில் இவர் நடித்திருந்தார்.

படத்தில் விஜய் சேதுபதியும் வாத்தியாராக நடித்து அவரும் மிரட்டலான நடிப்பை கொடுத்திருந்தார். இந்த இரு கேரக்டர்களின் காம்பினேஷனை மையமாகக் கொண்டு விடுதலை படம் உருவாகி இருந்தது. படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், ராஜீவ் மேனன், பாலாஜி சக்திவேல், இளவரசு, இயக்குனர் சரவண சுப்பையா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இதனிடையே இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது விறுவிறுப்பாக மேலும் அழுத்தமான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் மேலும் மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் இணைந்துள்ளனர்.

Actor Vijay Sethupathi & Director Vetrimaaran plan to go to America for Viduthalai 2 movie work

விடுதலை படம்: காமெடி நடிகராக சிறப்பான பல படங்களில் நடித்து வந்த நடிகர் சூரி நாயகன் அவதாரம் எடுத்திருந்த படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான இந்த படம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எப்போதுமே தான் இயக்கும் படங்களில் அழுத்தமான கதைக்களங்களை கொடுத்து வருபவர் வெற்றிமாறன். அந்த வகையில் விடுதலை படமும் அவரது இயக்கம் என்னும் மகுடத்தில் மற்றொரு இறகாக மாறியது. இந்த படத்தில் கான்ஸ்டபிள் குமரேசனாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் சூரி. இந்த படத்தின் மூலம் அவர் நாயகன் அவதாரமும் எடுத்திருந்தார்.

Actor Vijay Sethupathi & Director Vetrimaaran plan to go to America for Viduthalai 2 movie work

நாயகன் சூரி: இந்தப் படத்தின் வெற்றி அவருக்கு அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்து வருகிறது. விடுதலை படத்தில் முக்கியமான கேரக்டரில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார். வாத்தியாராக அவர் இந்த படத்தில் மிரட்டலான நடிப்பை கொடுத்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவைத் தொடர்ந்து தற்போது படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகி வருகிறது. இந்த படத்தின் சூட்டிங் கடந்த ஒரு ஆண்டுகளை தாண்டி நடந்து வருகிறது. முன்னதாக விடுதலை படத்தின் ஷூட்டிங்கின் போதே விடுதலை 2 படத்திற்கான காட்சிகளையும் வெற்றிமாறன் எடுத்ததாக கூறப்பட்டது ஆயினும் இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடந்து வருகிறது.

தாமதமாகும் ரிலீஸ்: கடந்த ஜனவரியிலேயே படம் ரிலீஸ் ஆக உள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இன்னும் ஒரு மாதம் ஷூட்டிங் நடக்க உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது 2வது பாகத்தில் நடிகை மஞ்சு வாரியர் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் இணைந்துள்ளனர். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் வரும் 20ஆம் தேதி துவங்கி தொடர்ந்து ஒரு மாதம் நடக்க உள்ளது. இந்த ஷெட்யூலில் அடுத்தடுத்து பெரிய அளவிலான ஆக்சன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாகவும் படத்தில் புதிய கேரக்டர்கள் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க பயணம்: விஜய் சேதுபதிக்கு பிரம்மாண்டமான மூன்று ஆக்சன் காட்சிகள் படத்தில் உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் அமெரிக்கா செல்ல உள்ளனர். படத்தில் விஜய் சேதுபதிக்கு பிளாஷ்பேக் காட்சிகள் உள்ளன. அதில் 19 வயது லுக்கில் அவர் நடிக்க உள்ள நிலையில் அவருக்கு டீ-ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி இளமையாக காட்ட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதி இதையொட்டிய பணிகளுக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X