Vijay sethupathi: 1.30 கோடி அள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி.. FEFSI கொடுத்த கௌரவம்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிவரும் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டிலேயே அவரது நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகின. ஜனவரி மாதத்திலேயே, மேரி கிறிஸ்துமஸ் படம் வெளியான நிலையில் அடுத்தடுத்த மகாராஜா, விடுதலை 2 படங்களும் கடந்த ஆண்டில் வெளியாகின.
இந்த மூன்று படங்களும் விஜய் சேதுபதிக்கு சிறப்பாக அமைந்தன. குறிப்பாக அவரது 50வது படமாக வெளியான மகாராஜா படம் 100 கோடி கிளப்பில் இணைந்ததுடன் சீனாவிலும் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அடுத்தடுத்து ஏஸ், ட்ரெயின் உள்ளிட்ட படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி பல ஆண்டுகளாக சிறப்பான பல படங்களை கொடுத்து வருபவர். தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக நடித்துள்ள இவர், முன்னதாக சில கேமியோ கேரக்டர்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து பல தேர்ந்தெடுத்த படங்களில் இவர் நடித்துள்ளார். பீட்சா உள்ளிட்ட பல படங்கள் இவரது இயல்பான நடிப்பால் சிறப்பான கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தன. தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் வில்லன், கேரக்டர் ரோல்களிலும் இவர் அதிரடி கிளப்பினார். கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், ஷாருக்கான் உள்ளிட்டவர்களுக்கு வில்லனாகியுள்ளார் விஜய் சேதுபதி.
அடுத்தடுத்த தளங்கள்: நடிகராக மட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் இவர் செயல்பட்டுள்ளார். விஜய் டிவியின் பிக்பாஸ் ஷோவில் இவர் ஹோஸ்ட்டாக செயல்பட்டுள்ளார். கடந்த ஆண்டிலேயே இவரது நடிப்பில் அடுத்தடுத்து மேரி கிறிஸ்துமஸ், மகாராஜா மற்றும் விடுதலை 2 படங்கள் வெளியான நிலையில், 50வது படமாக வெளியான மகாராஜா படம் வெகு சிறப்பாக அமைந்திருந்தது. இந்தப் படம் சீனாவிலும் வெளியாகி அதிகமான வசூலை பெற்றிருந்தது. இதனிடையே சமூக விஷயங்களிலும் அதிகமாக பேசி வருகிறார் விஜய் சேதுபதி. பல விஷயங்களிலும் அடுத்தடுத்து உதவி செய்து வருகிறார்.
FEFSIக்கு நன்கொடை: தற்போது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிறுப்பு கட்ட 1.30 கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளார். இதையடுத்து ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு விஜய் சேதுபதியின் பெயர் வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விஜய் சேதுபதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பெப்சி அமைப்பில் ஏறக்குறைய 25 ஆயிரம் தொழிலார்கள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், அவர்களுக்கு அடுக்குமாடி வீடுகட்டும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அந்த முயற்சிக்குத்தான் தற்போது விஜய் சேதுபதி கைக்கொடுத்துள்ளார்.
அடுத்தடுத்த படங்கள்: கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியானது விடுதலை 2 படம். இந்தப் படத்தில் வாத்தியார் கேரக்டரில் மாஸ் காட்டியிருந்தார் அதிரடியான இந்தக் கதையில் விஜய் சேதுபதி மிகவும் சிறப்பான வகையில் பொருந்தியிருந்தார். எந்த கதையாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பால் அந்த கேரக்டரை சிறப்பாக்கும் வித்தை தெரிந்துள்ள விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து ஏஸ், டிரெயின், காந்தி டாக்கீஸ் படங்கள் ரிலீசாகவுள்ள நிலையில், பிசாசு 2 படத்திலும் அவர் நடித்துள்ளார். இந்தப் படமும் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications