அட.. இந்த நடிகரும் வெப் சீரிஸில் நடிக்க போகிறாராம்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி வெப் சிரிஸில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் அசத்தி வருகிறார்.
அதேபோல் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து வருகிறார்.

அதிக படங்கள்
நடிகர் விஜயுடன் அவர் இணைந்து நடித்த மாஸ்டர் படம் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. கபெ ரணசிங்கம், கடைசி விவசாயி, லாபம், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இந்தியிலும் நடிக்கிறார்
விஜய் சேதுபதி நடிக்கவுள்ள துக்ளக் தர்பார் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதுமட்டுமின்றி உப்பன்னா என்ற தெலுங்கு படத்தில் ராயனம் என்ற வில்லன் கதாப்பாத்திரத்திலும், அமீர் கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற இந்தி படத்திலும் நடிக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

வெப் சீரிஸ்
கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தான் அந்த படத்தில் நடிக்கவில்லை என தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேம் குமார்
இதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாகவும் ஆனால் யார் இந்த வெப் சீரிஸை இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை. அதேநேரத்தில் 96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார் இந்த வெப் சீரிஸை இயக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

டிவி தொடர்
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்ப நாட்களில் நடிகர் விஜய் சேதுபதி படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications











