Vijay sethupathi: மீண்டும் இணையும் விஜய் சேதுபதி -நித்யா மேனன் ஜோடி.. ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதத்தில் வெளியான மகாராஜா படம் மிகப்பெரிய வரவேற்பை அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமான இந்த படம் அவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது. 100 கோடி ரூபாய் கலெக்ஷனை இந்தப் படம் நெருங்கியுள்ளது.

மகாராஜா படத்தில் அப்பா மற்றும் மகள் உறவை மையப்படுத்தி நிதிலன் மிகச் சிறப்பான கதைக்களத்தை கொடுத்திருந்தார். படத்தின் காட்சி அமைப்புகளும் சிறப்பாக அமைந்திருந்தன. இந்நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் விஜய் சேதுபதியின் 52வது படமாக உருவாகவுள்ளது.

Vijay sethupathi Pandiraj tamil cinema

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து சிறப்பான ஹிட்களை கொடுத்து வருகிறார். கடந்த ஜனவரியில் பொங்கல் வெளியீடாக விஜய் சேதுபதி -கத்ரினா கையிஃப் நடிப்பில் மெர்ரி கிறிஸ்துமஸ் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் கடந்த மாதத்தில் மகாராஜா என்ற படத்தை கொடுத்திருந்தார் விஜய் சேதுபதி. இந்த படம் மிகச் சிறப்பான விமர்சனங்களை அவருக்கு பெற்று தந்தது. படத்தின் திரைக்கதை மிரட்டியதாக ரசிகர்கள் சிலாகித்தனர். படம் விஜய் சேதுபதி கேரியரில் பெஸ்டாக அமைந்துள்ளது.

மகாராஜா படம்: அவரது 50வது படமான இந்தப் படம் அவருக்கு மறக்க முடியாத வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ஏஸ் படம் வெளியாகவுள்ளது. இதனிடையே மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள நிலையில் அவரது இயக்கத்திலேயே டிரெயின் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜுடன் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நித்யா மேனன் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி -நித்யா மேனன் ஜோடி: முன்னதாக இந்த ஜோடி மலையாளத்தில் 19 (1) (ஏ) என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தது. இந்நிலையில் தமிழில் இவர்கள் இருவரும் இணையவுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அடுத்தடுத்த மொழி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் வகையிலான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இயக்குநர் பாண்டிராஜ்: இந்நிலையில் கோலிவுட்டின் முன்னணி இயக்குனரான பாண்டிராஜ், அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைய உள்ளதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. முன்னதாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்ததாக VJ52 படத்தை அவர் இயக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் சில மாதங்களில் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X