Vijay Sethupathi: ட்ரெயின் படத்திற்காக உடலை குறைக்கும் விஜய் சேதுபதி.. க்யூட் லுக்கிற்கு பிளான்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி ஹீரோ என்ற இமேஜிற்குள் சிக்கிக் கொள்ளாமல் கேரக்டர் ரோல்கள், வில்லன் கேரக்டர்கள் என அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் ஷாருக்கான், நயன்தாரா லீட் கேரக்டர்களில் நடித்திருந்த ஜவான் படம் வெளியாகி மாஸ் காட்டியது.

Actor Vijay Sethupathi going to reduce his weight for Train movie

அடுத்தடுத்து விஜய், கமல் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து வில்லன் கேரக்டர்களில் நடித்து முடித்துள்ளார் விஜய் சேதுபதி.

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து ஹீரோ, வில்லன், கேரக்டர் ரோல்கள் என நடித்து மாஸ் காட்டி வருகிறார். கமல், விஜய் என அடுத்தடுத்து கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக அதிரடி காட்டிய விஜய் சேதுபதி, பாலிவுட்டிலும் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் நடித்து அதிரடி சரவெடியாக ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, பிரியா மணி, யோகிபாபு உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

வில்லனாக மிரட்டல்: கடந்த செப்டம்பர் மாதத்தில் சர்வதேச அளவில் ரிலீசான ஜவான் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. அடுத்தடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் மெர்ரி கிறிஸ்துமஸ், விடுதலை 2, மகாராஜா படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் டைரக்ஷனில் அடுத்ததாக ட்ரெயின் படத்தில் கமிட்டாகியுள்ளார் விஜய் சேதுபதி. இந்தப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

ட்ரெயின் படம்: வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாணு இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் தாடி, மீசையுடன் விஜய் சேதுபதி மாஸ் காட்டியுள்ளார். மேலும் இந்த போஸ்டரில் ட்ரெயின் ட்ராக் உள்ளிட்டவையும் காட்டப்பட்டுள்ளன. முன்னதாக பிசாசு 2 படத்தில் மிஷ்கின் இயக்கத்தில் கேமியோ ரோலிலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்நிலையில் ட்ரெயின் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மிஷ்கினின் 11வது படமாக இந்தப் படம் உருவாகவுள்ளது.

Actor Vijay Sethupathi going to reduce his weight for Train movie

தாமதமான சூட்டிங்: கடந்த ஆண்டிலேயே இந்தப்படத்தின் வேலைகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன்னுடைய இந்திப்பட கமிட்மெண்ட்களால் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியால் இணைய முடியவில்லை. இந்நிலையில் இந்தப் படத்தின் கதை ஒரு ராத்திரியில் ரயிலில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் விஜய் சேதுபதிக்கு டிம்பிள் ஹயாதி ஜோடியாக கமிட்டாகியுள்ளார்.

வெயிட்டை குறைக்கும் விஜய் சேதுபதி: மேலும் படத்தில் நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிரித்விராஜ், கேஎஸ் ரவிக்குமார், யூகிசேது உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். டெவில் படத்தின்மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள மிஷ்கின், இந்தப் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங், பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தில் தன்னுடைய பிட்னசை சிறப்பாக மாற்றும் நடவடிக்கைகளில் விஜய் சேதுபதி ஈடுபட்டுள்ளார். சமீப காலங்களில் அதிக வெயிட் போட்டு காணப்படும் அவர் இந்தப் படத்தின் க்யூட்டாக வெளிப்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X