லவ் யூ டூ மச்ணே.. லப்பர் பந்து நடிகரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி!

சென்னை: நடிகர் பால சரவணன் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான லப்பர் பந்து படம் இவருக்கு மிகச்சிறப்பான பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றுத் தந்துள்ளது.

கிராமத்துக்கு கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள லப்பர் பந்து படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தேவதர்ஷினி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் பால சரவணனின் கேரக்டர் படத்தின் நகர்வுக்கு மிகப்பெரிய அளவில் துணை புரிவதாக பாராட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த படம் அவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்துள்ளது.

vijay sethupathi bala saravanan

நடிகர் பால சரவணன்: நடிகர்கள் ஹரிஷ் கல்யாண். அட்டகத்தி தினேஷ். பால சரவணன், சுவாசிகா விஜய். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தேவதர்ஷினி உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களின் நடித்து கடந்த 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான லப்பர் பந்து படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். முன்னதாக கனா, எஃப்ஐஆர் ஆகிய படங்களில் இணை இயக்குனராகவும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதியும் கவனத்தைப் பெற்ற இயக்குனர், தற்போது லப்பர் பந்து படம் மூலம் தன்னுடைய முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்துள்ளார்.

லப்பர் பந்து படம்: லப்பர் பந்து படம் கிராமத்து கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள நிலையில், படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. குறிப்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், அஸ்வின் உள்ளிட்டவர்கள் இந்த படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். தற்போது ஹர்பஜன் சிங் புதிய படம் ஒன்றில் நடித்து வரும்நிலையில் அந்த டீம் சொல்லி தான் இந்த படத்தை பார்த்ததாக அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார். படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி என முன்னணி நடிகர்கள் தங்களுடைய இயல்பான மற்றும் அழுத்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.

vijay sethupathi bala saravanan

பால சரவணனை பாராட்டிய விஜய் சேதுபதி: இதனிடையே நடிகர் பால சரவணனும் இந்த படத்தில் மிகவும் முக்கியமான கேரக்டரை ஏற்று நடித்துள்ளார். அவருக்கு இந்த படம் மிகவும் சிறப்பாக கை கொடுத்துள்ளது. லப்பர் பந்து படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய் சேதுபதி தன்னை நேரில் அழைத்து பாராட்டியதாகவும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும் பாலசரவணன் தன்னுடைய நெகழ்ச்சியை தெரிவித்துள்ளார். படத்தில் தன்னுடைய நடிப்பை பார்த்து அவ்வளவு ரசித்ததாகவும், திரையரங்கில் அனைவரும் பாராட்டி கைத்தட்டியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் விஜய் சேதுபதி பாராட்டியதாகவும் பால சரவணன் மேலும் தெரிவித்துள்ளார்.

vijay sethupathi bala saravanan

பால சரவணன் நெகிழ்ச்சி: விஜய் சேதுபதியின் அன்பை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ள பால சரவணன், அவருக்கு மனமார்ந்த நன்றி மற்றும் அன்பு முத்தங்களை பகிர்ந்துள்ளார். மேலும் ஐ லவ் யூ சோ மச் அண்ணா என்றும் அவர் தன்னுடைய பதிவில் கூறியுள்ளார். முன்னதாக படத்தில் அட்டக்கத்தி தினேஷுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். லப்பர் பந்து படம் அவரது கேரியரில் பெஸ்ட்டாக அமைந்துள்ள நிலையில், அடுத்தடுத்த படங்களில் அவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X