Vijay sethupathi: நம்மளும் ஒரு படம் பண்ணுவோம்.. கருடன் ட்ரெயிலர் விழாவில் விஜய் சேதுபதி ஓபன்!
சென்னை: நடிகர் சூரி, சசிகுமார் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் கருடன். வரும் மே மாதம் 31ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள சூழலில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. சமுத்திரகனி, வெற்றிமாறன், துரை செந்தில்குமார் உள்ளிட்ட படக் குழுவினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் கருடன் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுடனும் விடுதலை படத்தில் விஜய் சேதுபதியுடனும் இணைந்து சூரி அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனுடன் அதிகமான படங்களில் சூரி இணைந்து நடித்துள்ளார்.

கருடன் படம்: நடிகர் சூரி, சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன்,. ஷிவதா, ரோஷனி ஹரிப்ரியன், மைம் கோபி, வடிவுக்கரசி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கருடன் படம், மிகப் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் மே மாதம் 31ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. கடந்த ஆண்டில் சூரி நடிப்பில் வெளியாகி மிகச் சிறப்பான விமர்சனங்களை பெற்றது விடுதலை படம். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தின் மூலம் ஹீரோவாக கோலிவுட் என்ட்ரி கொடுத்திருந்தார் சூரி. இந்த படத்தில் அவருடன் பவானிஸ்ரீ, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.
நாயகனாக சூரி: இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த சூழலில் தொடர்ந்து சூரிக்கு நாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. வெண்ணிலா கபடி குழு படம் மூலம் காமெடியனாக களமிறங்கிய சூரி, தொடர்ந்து சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்திருந்தார். இந்நிலையில் அவரது மற்றொரு பரிணாமத்தை விடுதலை படம் வெளிப்படுத்தியுள்ளது. இதனால் தனக்கு தொடர்ந்து நாயகனாக நடிக்கும் வாய்ப்புகளே வருவதாகவும் காமெடியனாக நடிக்க யாரும் கேட்கவில்லை என்றும் சூரி தனது பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
கருடன் ட்ரெயிலர் ரிலீஸ்: கருடன் படத்தின் டைட்டில் பிரமோ உள்ளிட்ட பல அப்டேட்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சூழலில், இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இதில் சசிகுமார், வெற்றிமாறன், துரை செந்தில்குமார் உள்ளிட்ட படக் குழுமினர் கலந்து கொண்ட சூழலில் சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரும் பங்கேற்றனர். இந்த படத்தின் கதையை வெற்றிமாறன் எழுதியுள்ள சூழலில் படத்தை இயக்கியுள்ளார் துரை செந்தில் குமார். கருடன் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, சூரிக்கு மிகப்பெரிய பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்.
விஜய் சேதுபதி பாராட்டு: தொடர்ந்து காமெடியனாக செயல்பட்டு வந்த சூரி, ஒரு கட்டத்தில் தன்னை ஹீரோவாக வெளிப்படுத்தியது குறித்து பாராட்டு தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, இதுபோல ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுவது மிகவும் கடினமான விஷயம் என்று தெரிவித்துள்ளார். இதை சூரி சிறப்பாக செய்து வருவதாகவும் அவர் தொடர்ந்து செய்ய இந்த படத்தின் ட்ரெயிலரில் வருவது போல அவருக்கு இயற்கை சிறப்பான வகையில் உதவி செய்யட்டும் என்றும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். நம்முடைய மண்ணின் அழகான முகம் சூரியினுடையது என்று தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, அவருக்கு மதுரையில் இருந்து மட்டும் இல்லாமல் அகில உலக அளவில் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை கொடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
துரை செந்தில்குமாருடன் இணைய விருப்பம்: இந்நிலையில் முன்னதாக நடிகை வடிவுக்கரசியின் பேச்சுக்கு பாராட்டு தெரிவித்த விஜய் சேதுபதி, இந்த படத்தில் இயக்குனர் துரை செந்தில்குமார் அனைவரையும் எப்படி அரவணைத்து சென்றார் என்பது குறித்து வடிவுக்கரசி கூறியதையும் தொடர்ந்து வெற்றிமாறன் துரை செந்தில்குமாரை பாராட்டியதையும் குறிப்பிட்டு தான் துரை செந்தில்குமார் உடன் இணைந்து படத்தில் நடிக்க விரும்புவதாக தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார். விரைவில் இந்தக் கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











