ஏகே 62 படம் குறித்து அப்டேட் சொன்ன விஜய் சேதுபதி.. சூப்பரான தகவலா இருக்கே!
சென்னை : நடிகர் அஜித் நடிப்பில் தற்போது துணிவு படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் இணையவுள்ளார் அஜித்குமார்.
இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித்
நடிகர் அஜித்தின் துணிவு படம் வரும் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை மற்றும் பாங்காக்கில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் புரோமோஷன் பணிகளையும் படக்குழு மேற்கொண்டு வருகிறது.

அடுத்தடுத்த ஸ்டில்கள்
ஒருபுறம் அஜித்தின் அடுத்தடுத்த ஸ்டில்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் படம் ரிலீசாகவுள்ள திரையரங்குகளில் அதிரடியாக பேனர்களை வைத்து படக்குழு அசத்தி வருகிறது. இந்த வாரத்தில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. படத்தின் ரிலீசையொட்டி இயக்குநர் ஹெச் வினோத் பல்வேறு தகவல்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

அஜித்திற்கு ஜோடியில்லை
இந்தப் படத்தில் அஜித் வில்லன் ஷேடில் நடித்திருந்தாலும் மங்காத்தா போன்ற படமாக இல்லாமல் அஜித்தின் வித்தியாசமான பரிணாமத்தை படம் வெளிப்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடித்துள்ள நிலையில், அஜித்திற்கு அவர் ஜோடியாக இல்லாமல் அவரது குழுவில் அவரும் ஒருவராக நடித்துள்ளதாகவும் ஹெச் வினோத் தெரிவித்துள்ளார். அஜித்தின் வயதுக்கு பொருந்தும் வகையில் மஞ்சு வாரியரை தேர்ந்தெடுத்ததாகவும் கூறியுள்ளார்.

ஏகே 62 படத்தில் அஜித்
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ஏகே62 படத்தில் இணையவுள்ளார் அஜித். இந்தப்படத்தின் சூட்டிங் ஜனவரியில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்துக் கொண்டு விக்னேஷ் சிவன் படத்தின் சூட்டிங்கிற்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏகே62 படம் குறித்து விஜய் சேதுபதி
இதனிடையே, இந்தப் படம் குறித்த சூப்பர் அப்டேட்டை நடிகர் விஜய் சேதுபதி தற்போது வெளியிட்டுள்ளார். படத்தின் ஒன்லைன் ஸ்டோரியை விக்னேஷ் சிவன் தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமாக தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் ரசிகர்களையும் வெகுவாக ஈர்க்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அஜித்திற்கு ஜோடி த்ரிஷா?
நானும் ரௌடி தான், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ள விக்னேஷ் சிவன், அடுத்ததாக அஜித்துடன் இணையவுள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத்தான் இசையமைக்கவுள்ளார். படத்தில் த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அஜித் உலக சுற்றுலா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











