27 வயசுலேயே தாடி நரைச்சு போச்சு.. நடிக்கவே தெரியாது.. விஜய் சேதுபதி மனம் திறந்த பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் திரையரங்கில் வெளியான மகாராஜா திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்று வசூலை அள்ளி வருகிறது. குரங்கு பொம்மை படத்தை இயக்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நித்திலன் இப்படத்தையும் மக்கள் ரசிக்கும் வகையில் கொடுத்துள்ளார். முதல் நாளில் வசூலை அள்ளி இப்படம் மூன்று நாட்களிலேயே 32.6 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தில் அனுராக் காஷ்யப், பாரதிராஜா, அபிராமி, மம்தா மோகன்தாஸ். நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, திவ்ய பாரதி, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார். மகாராஜா படத்திற்காக ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி இருந்த விஜய் சேதுபதி. பல இடங்களில் பேட்டி கொடுத்திருந்தார். அதில் ஒரு பேட்டியில் தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசி உள்ளார்.

தாடி நரைச்சு போச்சு: அதில், எனக்கு 27 வயசுலேயே தாடி, மீசை நரைத்துவிட்டது, ஒரு நாள் 'டை' அடித்துக்கொண்டு இருக்கும் போது என் தங்கை பார்த்துவிட்டு தாடி நரைத்துவிட்டது இதற்கு மேல் எப்படி சினிமா வாய்ப்பு வரும் என்று கேட்டார். அப்போது நான், இல்லடாமா நான் பாலு மகேந்திரன் சாரை பார்த்தேன் அப்போது அவர், என் கண்ணு நல்லா இருக்கு என்றார். அடுத்த நாள் வரசொல்லி எனக்குனு நேரம் ஒதுக்கி அதில் ஃபிலிம் போட்டு, லைட் வைத்து போட்டோ எடுத்துக்கொண்டு நான் படம் எடுக்கும் போது கூப்புடுகிறேன் என்று சொன்னார்.
நடிக்க தெரியாது: பாலு மகேந்திரா யாரையாவது போட்டோ எடுப்பாரா, அப்படி எடுக்கிறார் என்றால் ஏதோ ஒன்று இருக்கு என்று அர்த்தம். அந்த போட்டோ கொடுத்த நம்பிக்கையில் தான், நிச்சயம் சினிமாவில் பிழைத்துக்கொள்வோம் என்று நினைத்தேன். அப்படித்தான் வாழ்க்கையில் பல இடத்தில் சகுணங்கள் கொட்டி கிடக்கின்றன என்பதை நான் நம்புகிறேன். அதே போலத்தான் சிஜே பாஸ்கரின் சீரியலில் நடிக்கும் போது,எனக்கு நடிக்கவே தெரியாது, உதவி இயக்குநர்கள் என்னை திட்டுவார்கள்.
அப்போது தான் இயக்குநர், உன் கண்ணும் சிரிப்பும் நல்லா இருக்கு நீ உணர்ந்து நடித்தால் பெரிய ஆளாக வருவ என்றார். அந்த சீரியலில் தான் நடிப்பு என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன். அதற்கு முன்பு வரை வசனம் பேசுவது மட்டும் தான் நடிப்பு என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். அந்த 8 மாத சீரியல் தான் என்னை நடிகனாக்கியாது என்று விஜய் சேதுபதி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











