கமலின் விக்ரம் படம் குறித்து விஜய் சேதுபதி சொன்ன ஒத்த வார்த்தை.. என்னன்னு பாருங்க!

சென்னை: கமலின் விக்ரம் படம் குறித்து விஜய் சேதுபதி கூறிய ஒற்றை வார்த்தை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாநகரம், கைதி ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதனை தொடர்ந்து மாஸ் ஹீரோவான விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார்.

இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்கப்போகிறார் லோகேஷ் கனகராஜ்.

கோடை விடுமுறை

கோடை விடுமுறை

அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கி, அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

டைட்டில் டீசர்

டைட்டில் டீசர்

நேற்று கமல் பிறந்த நாளை முன்னிட்டு, லோகேஷ் கனகராஜ் படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்புக்கான டீஸரையும் படக்குழு வெளியிட்டது. இதனைக் கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

க்ரைம் த்ரில்லர்

க்ரைம் த்ரில்லர்

காவல்துறை சீருடை மற்றும் கரை வேட்டி கட்டியிருக்கும் சில நபர்களை அழைத்து கறி விருந்து வைக்கும் கமல், பின்னர் அவர்களை வேட்டையாடுவதாக மிரட்டும் வகையில் உள்ளது படத்தின் டைட்டில் டீசர். இதன் மூலம்
'விக்ரம்' திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் இருக்கும் என தெரிகிறது.

விஜய் சேதுபதி கருத்து

'இந்தியன் 2' படத்துக்கு முன்பாகவே வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தின் டைட்டில் டீசரை பார்த்து பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதியும் படத்தின் டைட்டில் டீசர் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் அழைப்பு

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சிறப்பு என பதிவிட்டு விக்ரம் படத்தின் டைட்டில் டீசரையும் ரீடிவிட் செய்துள்ளார். விஜய் சேதுபதியின் பதிவை பார்த்த நெட்டிசன்கள், மாஸ்டர் படத்துல வர பவானி மாறி, ஆண்டவருக்கு வில்லனா, விக்ரம் வேதா வேதவா இந்த படத்துல வாங்க மக்கள் செல்வன்... என அழைப்பு விடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X