Vijay Sethupathi: பரோட்டா மாஸ்டராக நடிக்கும் விஜய் சேதுபதி.. அட இத்தனை நாள் ட்ரெயினிங்கா?

சென்னை: விஜய் சேதுபதி அடுத்தடுத்து வெற்றிப்பட கூட்டணியில் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிதிலன் சாமிநாதனுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்திருந்த மகாராஜா படம் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஏஸ் மற்றும் ட்ரெயின் படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்த படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜுடன் இணைந்து அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார் விஜய் சேதுபதி. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் இணைந்துள்ளார். முன்னதாக இந்த ஜோடி மலையாளத்தில் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளது. அந்த படத்தில் இவர்களுக்கு காம்பினேஷன் காட்சிகள் குறைவுதான். இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இந்த ஜோடி தமிழில் இணைந்துள்ளது.

Vijay Sethupathi Pandiraj

நடிகர் விஜய் சேதுபதி: தான் ஏற்கும் கேரக்டர்களை மிக சிறப்பாக மாற்றும் சிறப்பு கொண்ட நடிகர்களில் விஜய் சேதுபதிக்கு மிக சிறப்பான இடம் எப்போதுமே உண்டு. நீண்ட போராட்டத்திற்கு பிறகு இவருக்கு சினிமாவில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாயகனாக கிடைத்த வாய்ப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள விரும்பாத விஜய் சேதுபதி, அடுத்தடுத்து நாயகனாகவும் வயதான கேரக்டரிலும் வில்லன் கேரக்டர்களிலும் வித்தியாசம் காட்டி நடித்து ரசிகர்களை மிரட்டி வருகிறார். அந்த வகையில் ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன், ஷாருக்கான் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து விட்டார் விஜய் சேதுபதி.

ஹீரோவாக கவனம்: தற்போது ஹீரோவாக தான் அதிகமான கவனத்தை செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ள விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மகாராஜா படம் வெளியாகி மிக சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. மகாராஜா படம் விஜய் சேதுபதியின் 50வது படமாக நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியானது. இந்த படம் ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 100 கோடி கிளப்பில் சீக்கிரத்திலேயே இணைந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஏஸ், ட்ரெயின் என படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இணைந்துள்ளார்.

விஜே52 படத்தின் சூட்டிங்: விஜய் சேதுபதியின் 52வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் இணைந்துள்ளார். முன்னதாக இந்த ஜோடி மலையாள படம் ஒன்றில் நடித்துள்ளது. ஆயினும் அதில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனுக்கு இடையிலான காம்பினேஷன் காட்சிகள் மிகவும் குறைவு. இந்நிலையில் தற்போது இவர்கள் கூட்டணியில் இரண்டாவது படமாக விஜே52 படம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் கதைக்களம் மிகவும் தனித்துவமானது என்று தனது சமீபத்திய பேட்டியில் நித்யா மேனன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுவரை தான் ஏற்காத கேரக்டரில் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

பரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதி: சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் சூட்டிங் இன்றைய தினம் தொடங்கியுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்க உள்ளார். இந்த கேரக்டருக்காக நேரடியாக போய் பரோட்டா மாவை உருட்டாமல், அதற்காக பிரத்தியேகமாக பயிற்சி மேற்கொண்டு உள்ளார் விஜய் சேதுபதி. கடந்த 20 தினங்களாக அலுவலகத்திற்கு சென்று பயிற்சி பெற்று, செட்டில் உள்ளவர்களுக்கு பரோட்டா சுட்டுக் கொடுத்துள்ளார். விஜய் சேதுபதியின் இந்த டெடிகேஷன் தான் அவரது வெற்றிக்கு காரணம் என்று தற்போது அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி -பாண்டிராஜ் கூட்டணி: இந்த படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டரும் மிகவும் யூனிக்காக இருப்பதாக கூறப்பட்டுள்ள சூழலில் எந்த மாதிரியான கேரக்டரை அவருக்கு பாண்டிராஜ் கொடுப்பார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மகாராஜா படத்தை தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் கமிட்டாகி வருகிறார் விஜய் சேதுபதி. இந்தப்படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X