Vijay Sethupathi: ரசிகர்களின் கொண்டாட்டத்தில் பங்கேற்ற விஜய் சேதுபதி.. மக்கள் செல்வன்னா சும்மாவா!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து தன்னுடைய படங்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மக்கள் செல்வனாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இது மட்டுமில்லாமல் ரசிகர்களின் நடிகன் என்றும் விஜய் சேதுபதி பாராட்டுக்கு உள்ளாகி வருகிறார். தன்னுடைய ரசிகர்களின் முக்கியமான குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்பதை இவர் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய ரசிகரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பங்கேற்றதை பார்க்க முடிந்தது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இன்றைய தினம் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் திருமண நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற வீடியோவும் வெளியாகியுள்ளது.

Vijay sethupathi Maharaja movie tamil cinema

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி மக்கள் செல்வனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். ரசிகர்களின் ஹீரோ என்றும் இவரை குறிப்பிட்டு சொல்வதுண்டு. அந்த வகையில் தன்னுடைய ரசிகர்களின் வீட்டின் முக்கியமான நிகழ்வுகள் பலவற்றில் தொடர்ந்து விஜய் சேதுபதி பங்கேற்று வருவதை காண முடிகிறது. நடிகர் விஜய் சேதுபதி தற்போது மகாராஜா, ட்ரெயின், ஏஸ் படங்களில் நடித்து வருகிறார். இதில் மகாராஜா படத்தை மிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ள சூழலில் இந்த படத்தின் மாஸான ட்ரெய்லர் இன்றைய தினம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மகாராஜா படம்: படம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிய வருகிறது. படத்தில் நட்டி நடராஜ், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர், இந்தப் படத்தையடுத்து ஏஸ் படத்தின் டைட்டில் பிரமோ மற்றும் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி மாஸ் காட்டியது. இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு ஹிந்தி மொழி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தொடர்ந்து தன்னுடைய கால்ஷீட்டை சரியான முறையில் பயன்படுத்தி அடுத்தடுத்து குறுகிய கால இடைவெளிகளில் படங்களை கொடுத்து வருகிறார்.

பாலிவுட் படங்கள்: கடந்த ஆண்டில் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ஜவான் படமும் கடந்த ஜனவரியில் பொங்கலையொட்டி வெளியான மெர்ரி கிறிஸ்துமஸ் படமும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்த பாலிவுட் படங்களாக வெளியாகி சிறப்பான வெற்றியையும் வரவேற்பையும் பெற்றுத் தந்துள்ளன. இந்நிலையில் அடுத்தடுத்த பொது நிகழ்ச்சிகளிலும் விஜய் சேதுபதி தன்னை சிறப்பாக ஈடுபடுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூரியின் நடிப்பில் உருவாகி நாளைய தினம் ரிலீசாகவுள்ள கருடன் படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்று சிறப்பித்து இருந்தார்.

ரசிகர்களுடன் கொண்டாட்டம்: இதுபோல அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் தன்னை வெளிப்படுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் தற்போது தன்னுடைய ரசிகர் மன்ற மாவட்ட தலைவர், துணை செயலாளரின் இல்ல திருமணத்தில் விஜய் சேதுபதி பங்கேற்று மணமக்களை நேரில் வாழ்த்தியுள்ளார். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கூட்டத்தோடு கூட்டமாக எந்தவித பந்தாவும் இல்லாமல் விஜய் சேதுபதி இந்த வீடியோவில் காணப்படுகிறார். ஆனால் அவருடன் இணைந்து புகைப்படங்களையும் செல்ஃபியையும் எடுத்துக் கொள்ள அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

ரசிகர் இல்ல திருமணத்தில் பங்கேற்பு: அவர்களுக்கு ஈடு கொடுத்து அடுத்தடுத்து புகைப்படங்களில் போஸ் கொடுத்த விஜய் சேதுபதியின் நிதானத்தையும் இந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்த படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்ட சூழலில் தற்போது இந்த படத்தின் சூட்டிங் மேலும் நீடிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தில் வாத்தியார் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். முதல் பாகத்தை காட்டிலும் இந்த பாகத்தில் இவரது கேரக்டர் நீட்டிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X