பாலியல் பிரச்சனையை சொல்லும் ஆவெ - விஜய் சேதுபதியோடு ஜோடி சேரும் காஜல் அகர்வால்
சென்னை: உளவியல் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமை போன்ற சமூக பிரச்சனைகளை பற்றி பேசும் ஆவெ என்னும் புதிய படத்தில் விஜய் சேதுபதியும் காஜல் அகர்வாலும் முதன் முறையாக ஜோடி சேர்கின்றனர்.
சிலரைப் பார்த்து இவருக்கு உடம்பெல்லாம் மச்சம் இருக்கு என்று சொல்வதுண்டு. இன்னும் சிலபேரை பார்க்கும்போது, இவருக்கு மச்சத்திலேயே உடம்பு இருக்கு என்றும் சொல்வார்கள். அது போலத்தான் நம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும்.

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் அனைத்து முன்னணி ஹீரோயின்களுடனும் ஜோடி சேர்ந்த ஒரே நடிகர் இவராகத்தான் இருக்கும் போல் தெரிகிறது.
விஜய் சேதுபதி ஆண்டுக்கு சராசரியாக 10 படங்களாவது நடித்து வருகிறார். அதுவும் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள் தான். ஏற்கனவே சுமார் டஜன் படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படமானது, பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா போன்ற பலர் நடித்து 2018ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளியான ஆவெ. இந்தப் படத்தில் முதன் முறையாக விஜய் சேதுபதியுடன் காஜல் அகர்வால் ஜோடி சேர்கிறார்.
இப்படம் உளவியல் பிரச்னைகள், பாலியல் வன்கொடுமை, ஓரினச் சேர்க்கை, போதை பொருள் போன்ற பல சமூக பிரச்சனைகளை பற்றி பேசிய படம். இப்படம் தெலுங்கு திரையுலகில் அபார வெற்றியை பெற்றது. மேலும் 66வது தேசிய திரைப்படை விருதுகளில் இப்படத்திற்கு சிறந்த ஒப்பனை மற்றும் சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்டுக்கான விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆவெ படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளார் இயக்குனர் பிரஷாந்த் வர்மா. இது தெலுங்கு மட்டுமின்றி தமிழ் மொழியிலும் உருவாகவுள்ளது.
இப்படத்திலும் காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். விஜய் சேதுபதியும், காஜல் அகர்வாலும் இணையும் முதல் படம் என்பதால் தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கில் ஆவெ முதல் பாகம் வெற்றி அடைந்ததை போலவே ஆவெ இரண்டாம் பாகமும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் இயக்குனர் பிரஷாந்த் வர்மா.


Click it and Unblock the Notifications











