மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் போட்டோ ஷுட் நடத்திய விஜய் சேதுபதி.. வைரலாகும் போட்டோஸ்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடத்தியிருக்கும் போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோ மட்டுமில்லாமல் எந்த மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
வில்லன், வயதான கேரக்டர், குணச்சித்திர கேரக்டர் என எந்த எதிர்பார்ப்பும் இன்றி கதைக்கு முக்கியத்துவமான அத்தனை பாத்திரங்களையும் ஏற்றுவருகிறார்.

வில்லனாக மிரட்டல்
ஏற்கனவே ரஜினியின் பேட்ட படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்த விஜய் சேதுபதி, அண்மையில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படத்திலும் பவானி என்ற வில்லன் கேரக்டரில் மிரட்டினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படத்திலும் வில்லனாக மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

கத்ரினா கைஃபுடன்..
இதேபோல் இந்தி படத்திலும் பிஸியாக உள்ளார் விஜய் சேதுபதி. கத்ரீனா கைஃபுடன் இந்தியில் மெரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

தலையில் தொப்பி..
வித்தியாசமான உடைகளில் இளைஞர் போன்றும் நடுத்தர வயது மற்றும் வயதான தோற்றத்திலும் உள்ளார் விஜய் சேதுபதி. இதில் இளைஞர் லுக்கில் உள்ள விஜய் சேதுபதி தலையில் தொப்பியுடன் சகலகலா வல்லவன் கமல் கெட்டப்பில் உள்ளார்.

மூன்று கெட்டப்புகளில்..
இதேபோல் கையில் போனுடன் ஒரு கெட்டப்பிலும் சற்று வயதான கெட்டப்பில் கோட் சூட் கூலர்ஸ் என ஒரு கெட்டப்பிலும் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் விஜய் சேதுபதி. கடந்த ஆண்டு போட்டோகிராஃபர் எல் ராமச்சந்திரனுடன் இணைந்து ஹியூமன் என்ற தலைப்பில் போட்டோ ஷுட் நடத்தினார் விஜய் சேதுபதி.

காஸ்ட்யூம் டிசைனர்
இந்நிலையில் மேன் ஆஃப் பியூஷன் என்ற தலைப்பில் தற்போது போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் விஜய் சேதுபதி. இதுதொடர்பாக பேசியுள்ள போட்டோகிராஃபர் ராமச்சந்திரன், கேரளாவைச் சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் காஸ்ட்யூம் டிசைனரான ரோஷ்னா அன் ராய் விஜய் சேதுபதியுடன பணியாற்ற வேண்டும் என கேட்டார் என்றும் அதற்காக இந்த போட்டோ ஷுட்டை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











