விஜய்சேதுபதியின் மிரட்டலான கெட்டப்..லாக்டவுன் ஸ்பெஷல் போட்டோஷூட் !

சென்னை: ஊரடங்கு ஆரம்பித்து 5 மாதங்களாகியுள்ள நிலையில் சாமானியர் ஒருவரின் நிலை எப்படி தலைகீழாக மாறியுள்ளது என்பதை பிரபல திரைப்பட நடிகர் விஜய்சேதுபதியின் இன்றைய தோற்றத்தை தன் புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் பிரபல புகைப்பட கலைஞர் ராமச்சந்திரன்.

Recommended Video

மனிதன் Vijay Sethupathi Photo shoot Making • வீடே ஒரு சிறை

இந்த ஊரடங்கில் படுபிஸியாக இருந்த நட்சத்திரங்கள் வீட்டில் எப்படி இருக்கிறார் என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது இந்த மாஸான புகைப்படம்.

இந்தபுகைப்படத்தில் ஒரு சாமானியனின் இயல்பான தோற்றத்தை அச்சுபிசகாமல் இயல்பாகவே காட்டி இருக்கிறார் புகைப்படக்கலைஞர்.

3 வகையான கொரோனா வேக்சின்கள்.. 9 கோடி டோஸ்களை வாங்கி குவித்த யுகே.. பின்னணியில் செம திட்டம்!

உலகை உலுக்கிய கொரோனா

உலகை உலுக்கிய கொரோனா

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா எனும் கொடிய வைரஸுக்கு முற்றுபுள்ளி வைக்க மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும், மத்திய மாநில அரசுகளும் முனைப்புடன் செயலாற்றி வருகின்றன. நோய் தொற்று ஏற்பட்டு பாதித்தவர்கள் ஒருபுறம் என்றால், தொற்று ஏற்படாதவாறு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மனதளவில் பாதித்தவர்கள் மற்றொருபுறம். நாள்தோறும் பரபரப்பாக இயங்கி வந்தவர்கள் எல்லாம், தற்போது செய்வதறியாது வீட்டில் முடங்கி போயுள்ளனர்.

ஆட்டிப்படைக்கிறது

ஆட்டிப்படைக்கிறது

கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க நினைத்தவர்கள் எல்லாம் தற்போது வீட்டு சிறையில் அடைந்துகிடக்கின்றனர். கொரோனா ஒருவரை எப்படியெல்லாம் ஆட்டிப்படைத்துள்ளது, இந்த கொடிய வைரஸால் முடங்கிபோன தொழில்கள் என, இவை அத்தனையும் பிரபல திரைப்பட நடிகர் விஜய்சேதுபதியை இந்த புகைப்படத்தில் பார்க்கும்போது தெரிகிறது. ஆம், பிரபல புகைப்பட கலைஞர் ராமச்சந்திரனின் கைவண்ணமே இது.

மாஸான விஜய்சேதுபதி

மாஸான விஜய்சேதுபதி

கொரோனாவால் முடங்கிபோன சென்னையை, தன் புகைப்பட கருவி மூலம் பதிவுசெய்ய நினைத்தபோது, தமிழ் திரையுலகில் எதார்த்தமான நடிகர் என பெயரெடுத்த விஜய்சேதுபதி நினைவுக்கு வந்துள்ளார். இந்நேரத்தில் விஜய்சேதுபதியை தொடர்புகொண்டு பேசியுள்ளார் ராமச்சந்திரன். விஜயசேதுபதியிடம் பேசிய புகைப்பட கலைஞர் ராமச்சந்திரன், ஊரே முடங்கிபோயுள்ள இந்த நேரத்தில், உங்களை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். புகைப்பட கலைஞர் ராமச்சந்திரனின் கோரிக்கைக்கு பிறகு அனுமதி கொடுத்த விஜய்சேதுபதியே, இந்த புகைப்படத்துக்கு சொந்தகாரர்.

வீடு சிறையானது

வீடு சிறையானது

தமிழ், தெலுங்கு திரையுலகையே தன் எதார்த்த நடிப்பாலும், எளிமையான பழக்கவழக்கத்தாலும் தன் உள்ளங்கையில் வைத்திருந்த விஜய்சேதுபதியை இந்த தோற்றத்தில் பார்க்கும்போது கொரோனாவும், ஊரடங்கும் எப்படிப்பட்டது என்று தெரிகிறது. இது குறித்து பேசிய விஜய்சேதுபதி, இந்த ஊரடங்கால், வீடு சிறையாகும் என்று நினைத்துகூட பார்க்கவில்லை என்று கூறுகிறார். வீட்டில், தன் குடும்பத்தினருடன் இருந்திருந்தாலும் வீடு சிறைபோன்ற ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டதாக கூறுகிறார் விஜய்சேதுபதி.

கெத்துகாட்டும் நாயகன்

கெத்துகாட்டும் நாயகன்

திரைப்படங்களில் நாயகனாக பொலிவுடன் வலம் வந்து, ஆடிப்பாடி நடித்த விஜய்சேதுபதி, தற்போது இந்த 5 மாத ஊரடங்கால், முகத்தில் நீண்ட தாடியுடனும், அங்குமிங்கும் நரைத்த முடியுடனும் காட்சியளிக்கிறார். "புகைப்பட கலைஞர் ராமச்சந்திரனின் இந்த ஒரு புகைப்படமே ஒட்டுமொத்த கொரோனா எனும் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் சாமானியனின் நிலை" என்பதற்கு சான்று.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X